sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

 திருநின்றவூர் - நெமிலிச்சேரி இடையே மின் விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

/

 திருநின்றவூர் - நெமிலிச்சேரி இடையே மின் விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

 திருநின்றவூர் - நெமிலிச்சேரி இடையே மின் விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

 திருநின்றவூர் - நெமிலிச்சேரி இடையே மின் விளக்கு அமைக்கும் பணி துவக்கம்


PUBLISHED ON : பிப் 16, 2026 05:24 AM

Google News

PUBLISHED ON : பிப் 16, 2026 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர்: திருநின்றவூரில் இருந்து நெமிலிச்சேரி வரை 4 கி.மீ., துாரத்திற்கு மின் விளக்கு அமைக்கும் பணி நடக்கிறது.

சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் நெமிலிச்சேரி ரவுண்டானா முதல் திருநின்றவூர் வரை 4 கி.மீ., துாரம் உடையது.

இந்த சாலையை ஒட்டி, நெமிலிச்சேரி ஊராட்சி, நடுக்குத்தகை ஊராட்சி, திருநின்றவூர் நகராட்சி பகுதிகள் உள்ளன. 60,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்கு, டாடா ஸ்டீல் ஆலை, டி.ஐ., சைக்கிள் நிறுவனம், சிறு, குறு நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. தாம்பரம் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டிய பகுதி என்பதால், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

போக்குவரத்து அதிகம் இருப்பினும், எட்டு ஆண்டுகளாக நெமிலிச்சேரியில் இருந்து திருநின்றவூர் வரை, சி.டி.எச்., சாலையில் மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால், சாலை கும்மிருட்டாக மாறியது. இதனால், விபத்து, வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடக்கும் அபாயம் ஏற்பட்டது.

இது குறித்து நம் நாளிதழில் கடந்த நவ., 23ல் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, திருநின்றவூர் நகராட்சி, நெமிலிச்சேரி மற்றும் நடுக்குத்தகை ஊராட்சி, பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் பொது நிதியில் இருந்து 1.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மையத்தடுப்பில், 120 வாட்ஸ் அளவிலான 292 எல்.இ.டி., விளக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தெரு விளக்கு அமைக்கப்படும் விபரங்கள்

உள்ளாட்சியின் பெயர் கம்பம் மின் விளக்கு மதிப்பீடு நெமிலிச்சேரி ஊராட்சி 25 50 ரூ.21 லட்சம் நடுக்குத்தகை ஊராட்சி 30 60 ரூ.26 லட்சம் திருநின்றவூர் நகராட்சி 91 182 ரூ.76.50 லட்சம்








      Dinamalar
      Follow us