PUBLISHED ON : செப் 25, 2024 12:00 AM

த.மா.கா., தலைவர் வாசன்: தென் மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்க, தி.மு.க., ஆட்சி தான் காரணம். கொலை, கொள்ளை, பள்ளி - கல்லுாரி முன்போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாகி விட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக,தி.மு.க.,வால் செயல்பட முடியவில்லை. அதனால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் உறுதியாக உள்ளனர்.
டவுட் தனபாலு: ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக இருந்தாலும், அந்த இடத்தை நிரப்ப உங்க கட்சி தயாரா இருக்குதா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி... உங்களுக்கே அந்த நம்பிக்கை இல்லாததால் தான், 'த.மா.கா., ஆட்சிக்கு வரும்'னு எங்கயும் பேச மாட்டேங்குறீங்களோ என்ற, 'டவுட்' வருது!
ஒடிசாவில் செயல்படும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக்: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில், எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது. இது தொடர்பான அறிக்கையை முழுமையாக படித்து ஆய்வு செய்த பின்பே, அதை ஆதரிப்பதா, எதிர்ப்பதாஎன்பது குறித்து முடிவு செய்வோம்.
டவுட் தனபாலு: அது சரி... பா.ஜ., ஆட்சியில் கொண்டு வரப்படும் திட்டம் என்பதாலேயே,எதிர்க்கட்சிகள் கண்ணைமூடிட்டு, இந்த திட்டத்தை எதிர்க்கிறாங்க... அந்த வகையில், நிதானமாக சிந்தித்து செயல்படும் நீங்க ஒரு வித்தியாசமான தலைவர் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன்: பிரதமர் மோடி, மீனவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மீனவர்கள் கடல் பொருட்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டால், அன்னிய செலாவணிவாயிலாக அதிக பணம் ஈட்டலாம். மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற, பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பாரம்பரிய மீனவர்களுக்கு எவ்விதநஷ்டமும் வரக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது.
டவுட் தனபாலு: மீனவர்களுக்கு எத்தனையோ நல திட்டங்களை பிரதமர் அமல்படுத்தியிருக்கலாம்...ஆனா, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையிடம் அடிக்கடி சிக்கி அல்லல்படுறாங்களே... அதுக்கும் ஒரு நிரந்தர தீர்வை பிரதமர் மோடி எடுத்தார்என்றால், அவரை மீனவர்கள்தலையில் துாக்கி வச்சு கொண்டாடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!