sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : மே 29, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 29, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்., கட்சியை சேர்ந்த, கர்நாடக உணவுத் துறை அமைச்சர் முனியப்பா: தமிழர் களும், கர்நாடகத்தவரும் சகோதரர்களாக உள்ளனர். அதனால்,காவிரி பிரச்னையையும் அந்தக் கோணத்திலேயே அணுகுவர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சிக்கல் எதுவும் இன்றி தீர்க்கப்படும்.

டவுட் தனபாலு: நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா, உங்க கட்சியின் துணை முதல்வர்சிவகுமார், 'மேகதாது அணையை கட்டியே தீருவோம்'னு கங்கணம் கட்டிட்டு இருக்காரே... மூத்த தலைவர் என்ற முறையில், அவருக்கு அறிவுரை சொன்னீங்க என்றால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: இம்முறை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ.,வெற்றி பெறும். நாடு முழுதும் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். தென் மாநிலங்களில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பின் வடக்கு, தெற்கு என்ற வாதம் இருக்காது.

டவுட் தனபாலு: பக்கத்து மாநிலங்கள்ல எல்லாம் பா.ஜ., அனைத்து தொகுதிகளிலும் ஜெயிக்கும்னு சொல்றவர், தமிழகத்துலயும் அப்படி ஜெயிக்கும்னு அடித்து சொல்ல மாட்டேங்கிறாரே... தன் கட்சியினர் உழைப்பு மீது நம்பிக்கை இல்லையா அல்லது தி.மு.க., கூட்டணி மீது அபார நம்பிக்கையா என்ற, 'டவுட்' வருதே!





தென்சென்னை தொகுதி பா.ஜ., வேட்பாளர் தமிழிசை: ஹிந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஹிந்துத்துவா தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால், ராமர் கோவில் சென்று வழிபட்டு, '100 ஆண்டு ராமர் கோவில் கனவு நனவாகியுள்ளது' என கூறியிருப்பார். நாங்கள் ஜெயலலிதாவை இந்தியா முழுதும் எடுத்து செல்ல விரும்புகிறோம். அவரை அ.தி.மு.க.,வினர் குறுகியவட்டத்தில் வைக்க முயற்சி செய்கின்றனர்.

டவுட் தனபாலு: இப்ப ஜெ., மீது பாசம் பொங்க பேசுறீங்களே... அவங்க, சொத்து குவிப்பு வழக்குல, கர்நாடகா சிறையில அடைக்கப்பட்டப்ப, அவங்க ஹிந்துத்வா தலைவர்என்பது தங்களுக்கும், தங்களது கட்சி தலைமைக்கும் தெரியாதா என்ற, 'டவுட்' வருதே!








      Dinamalar
      Follow us