sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக காங்., மூத்த தலைவர் திருநாவுக்கரசர்: கடவுள் ஒருவரால் தான் யாரையும் ஆக்கவும், அழிக்கவும் முடியும். சிலர் என்னை அரசியலை விட்டு ஒதுக்க நினைக்கின்றனர். அது நடக்காது. திருச்சியை மையமாக வைத்து, என் அரசியல் பயணம் பல காலம் தொடரும்.



டவுட் தனபாலு: திருச்சியை தான் ம.தி.மு.க.,வின் துரை வைகோவுக்கு பட்டா போட்டு குடுத்துட்டாங்களே... அது சரி... உங்க சீனியாரிட்டிக்கும், பல கட்சிகள்ல இருந்த உங்க அனுபவத்துக்கும், கட்சி தலைமையிடம் ராஜ்யசபா சீட் கேட்கணும் என்ற எண்ணம் உங்களுக்கு வராதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!



தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராம சீனிவாசன்: தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், 3 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகரித்து, தமிழகத்துக்கு 8.50 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒவ்வொரு குடிமகன் பெயரில், 1.65 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இந்த சுமையால் தான் தமிழகத்தில் மின் கட்டணம், தொழில் வரி, வீட்டு வரி உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. கடன், போதையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.



டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில், 'தமிழகத்தை கடன்கார மாநிலமா பழனிசாமி மாத்திட்டு இருக்கார்'னு, தி.மு.க.,வினர் புகார் பத்திரம் வாசித்தாங்க... இப்ப, அவங்களும் அதே பாதையில் தானே பயணிக்கிறாங்க... தி.மு.க., ஆட்சி முடியுறப்ப, தமிழகத்தின் கடன் சுமை, 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

விருதுநகர் தொகுதி காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிகளை, மத்திய அரசு, 'எல் அண்டு டி' நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. ஒப்பந்தப்படி, 2024 மார்ச்சில் தொடங்கி, 33 மாதங்களில் இரண்டு கட்டங்களாக, எய்ம்ஸ் கட்டடம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 18 மாதங்களில் முதல் கட்ட பணிகள் முடிந்து, நம் கண் முன் தெரியும் கட்டடமாக அது மாறும்.

டவுட் தனபாலு: 'எய்ம்ஸ்' மருத்துவமனை தமிழகத்துக்கு வரவே வராதுன்னு செங்கல்லை வைத்து பிரசாரம் செய்தவங்க, உங்களது இந்த பதிலை கேட்டு அதிர்ச்சி ஆகியிருப்பாங்க... 2026 சட்டசபை தேர்தலில், அவங்களுக்கு, எய்ம்ஸ் எந்த வகையிலும் உதாவது என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!






      Dinamalar
      Follow us