PUBLISHED ON : ஆக 28, 2024 12:00 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: முதல்வர் ஸ்டாலின்வெளிநாடு சென்றிருக்கிறார்.அதற்கு முன், கட்சியின்மூத்த தலைவரானதுரைமுருகன் போன்ற ஒருவரை துணை முதல்வராக்கியிருக்க வேண்டும்.துரைமுருகனுக்கும் அப்படியொரு எதிர்பார்ப்பு இருக்குமில்லையா?
டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே அந்த ஆசை நிராசையாபோச்சுங்கிறது தானே துரைமுருகனின் கவலை.'சீனியரெல்லாம் இருக்க, ஸ்டாலினை முன்னிறுத்துறாரே...' என்ற மன ஓட்டத்தில் இருந்த அந்த நாட்களை துரைமுருகன் மறந்திருக்க மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் முனுசாமி: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'திராவிட கட்சிகளை ஒழிப்போம்' என்கிறார். ஆனால், வரும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே மட்டுமே போட்டி இருக்கும். 1967 முதல், திராவிட கட்சிகள் மட்டுமேதமிழகத்தை ஆள்கின்றனஎன்பது அவருக்கு புரியவில்லை. இந்திய அளவில் பா.ஜ., ஆளும் மற்ற மாநிலங்களை விட, திராவிட கட்சிகள் ஆளும் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் உள்ளது என்பதை, அண்ணாமலை உணர வேண்டும்.
டவுட் தனபாலு: 'கடந்த மூணு வருஷமா விடியா தி.மு.க., ஆட்சியில், தமிழகம் எல்லா துறைகளிலும் பின்தங்கி போயிடுச்சு'ன்னு உங்க தலைவர்பழனிசாமி போற ஊர்ல எல்லாம் புகார் வாசிச்சிட்டு இருக்காரு... ஆனா, நீங்க உங்க கட்சியை பாராட்டுற சாக்குல, தி.மு.க., அரசையும் சேர்த்து பாராட்டி, 'சேம் சைடு கோல்' போட்டுட்டீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: புதிதாகதுவங்கிய கட்சி அமாவாசை கூட தாண்டாது. எம்.ஜி.ஆர்., எங்களிடம் இருந்து கட்சியை பங்கு போட்டுக் கொண்டு சென்றார். எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை. புலியை பார்த்து, பூனை சூடு போட்டுக் கொண்டது போல உள்ளது.
டவுட் தனபாலு: 'அ.தி.மு.க.,வும், நாங்களும் பங்காளிகள்'னு நீங்களும் சொல்றீங்க... அ.தி.மு.க.,வின் முனுசாமி போன்றவர்களும் அடிக்கடி சொல்றாங்க... ஆனா, சமீபகாலமா நடக்கிற சம்பவங்களை பார்த்தால், பங்காளி இடத்தை பா.ஜ.,வுக்கு உங்க தலைமை கைமாத்தி விட்டுடுச்சோ என்ற, 'டவுட்'தான் வருது!

