PUBLISHED ON : செப் 11, 2024 12:00 AM

தமிழக சட்டத்துறை அமைச்சர்ரகுபதி: எங்களுடன் பலமாக போட்டி போடக்கூடிய கட்சி, தமிழகத்தில் இல்லை; அதற்கானதேவை ஏற்பட்டிருக்கிறது. அப்படிஇருந்தால் தான், நாங்கள்உற்சாகமாக தேர்தல் பணியாற்றமுடியும்.
டவுட் தனபாலு: உங்களை உற்சாகமா பணியாற்ற வைக்க தான், பல கட்சிகள் வரிசைகட்டுது... அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம்னு இப்போதே நான்கு எதிரிகள் உங்களுக்கு எதிரா தயாராகிட்டு இருக்காங்க... இவங்களை சமாளித்து,நீங்க ஜெயிச்சாலே, அது வரலாற்று சாதனை தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ., மூத்த தலைவரான, -மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்: இந்தியாவை இழிவுபடுத்துவதற்கும், இந்த நாட்டின் புகழை கெடுப்பதற்காகவும் மட்டுமே ராகுல் வெளிநாடுகளுக்கு செல்கிறார். முன்பெல்லாம்,ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு தளவாடங்களை இந்தியாஇறக்குமதி செய்து கொண்டிருந்தது. தற்போது, நம்நாட்டிலேயே இவற்றைதயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதை புகழ்வதற்கு பதிலாக, வெளிநாடுகளுக்கு சென்று விட்டாலேஇந்தியாவை ராகுல்அவமதித்து பேசுகிறார்.
டவுட் தனபாலு: இந்தியாவுல, பா.ஜ.,வுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசினால் தான், நீங்க வழக்கு போட்டு, ராகுலின் எம்.பி., பதவிக்கு, 'ஆப்பு' அடிச்சிடுறீங்களே... அதனால தான், பாதுகாப்பா வெளிநாடு போய் உட்கார்ந்துட்டு, இப்படி எல்லாம் பேசுறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி:தமிழகத்தில் ஒரே நாளில் ஆறு கொலைகள் நடந்துள்ளதால், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டம் - ஒழுங்கை காக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எங்காவது நடக்கும் சம்பவத்தை, சட்டம் - ஒழுங்குடன் ஒப்பிடக்கூடாது.
டவுட் தனபாலு: 'கிட்டத்தட்ட,எட்டு கோடி பேர் வசிக்கிறதமிழகத்துல, ஒரே நாள்ல ஆறு கொலைகள் எல்லாம் ரொம்பவே சர்வ சாதாரணம்... இதை போய் குறை சொல்றீங்களே'ன்னு அமைச்சர் சுட்டிக்காட்ட வர்றாரோ என்ற, 'டவுட்' தான் ஏற்படுது!

