sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

6


PUBLISHED ON : பிப் 25, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 25, 2025 12:00 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க., ஆட்சியில், 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டு, இரண்டே முக்கால் ஆண்டுகளில், 51,757 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரே நாளில், 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும், அ.தி.மு.க., அரசின் சாதனையில் 10 சதவீதத்தைக்கூட நிறைவேற்ற முடியவில்லை.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சின்னு பொத்தாம் பொதுவாக சொன்னா எப்படி...? ஜெ., தலைமையில் நடந்த ஆட்சி, உங்க தலைமையில் நடந்த ஆட்சி என்றால், அதை குறிப்பிட்டிருப்பீங்களே... நீங்க பொத்தாம் பொதுவாக சொல்வதை பார்த்தாலே, பழனிசாமி ஆட்சியில் தான் இந்த சாதனை நடந்திருக்கு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

lll

தி.மு.க.,வைச் சேர்ந்த, துாத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி: இனி, எவனாது தி.மு.க.,வையோ, முதல்வரையோ பற்றி பேசினால், நேரடியாக 'அட்டாக்' பண்ணுங்கள். அவனை அடித்தாலும் சரி; விரட்டினாலும் சரி... எப்படியோ செய்யுங்கள். உங்க ஆக்ஷ னுக்கு பின், மறுபேச்சு பேசக்கூடாது. மிசா காலத்தையே பார்த்தவர்கள் நாம். தி.மு.க.,வில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அதனால் துணிந்து செயல்பட வேண்டும்.

டவுட் தனபாலு: எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர் என்றால், உங்க சாதனைகளை எடுத்து கூறி, பதிலடி தரணும்... அதை விட்டுட்டு, 'அடிங்க, உதைங்க' என்றால், உங்களிடம் எடுத்து சொல்ல சாதனைகள் எதுவுமில்லாம தான், வன்முறை வழியை நாடுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: பருவ காலங்களில் மரங்களுக்கு இலையுதிர் காலம் என்ற ஒன்று உண்டு. அதேபோல, நாம் தமிழர் கட்சிக்கு தற்போது களையுதிர் காலம். கட்சியில் களையாக இருப்போர், தாங்களாகவே கட்சியில் இருந்து உதிர்ந்து விடுவர்.

டவுட் தனபாலு: ஒரு படத்தில் நடிகர் வடிவேலு, 'நீ எடுக்கிறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்'னு சொல்ற மாதிரி, உங்க கட்சியில் இருந்து விலகுறவங்க எல்லாரும் களைகள் தானா...? அப்படி என்றால், களைகளுக்கு தான் இத்தனை நாட்களா நீரூற்றி வளர்த்துட்டு இருந்தீங்களா என்ற, 'டவுட்' வருதே!

lll






      Dinamalar
      Follow us