sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: 'நாம் தமிழர் கட்சியின் ஓட்டுகள் சிதறுகிறது. அது, த.வெ.க-.,வுக்கு போகிறது' என, சொல்கின்றனர். த.வெ.க.,-விற்குசெல்பவர்கள், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களே கிடையாது. நான், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா காலத்திலே கட்சி துவங்கியவன். அவர்களைவிடவிஜய் பெரிய தலைவரா அல்லதுஅவர்களைவிட கூட்டம் அதிகம் வந்து விட்டதா?

டவுட் தனபாலு: கருணாநிதி, ஜெ.,யைவிட பெரிய தலைவர்கள்யாரும் இல்லை என்பது உண்மைதான்... அதே மாதிரி, நடிகர்கள் கட்சியில் விஜய்க்குதான் இன்று முதலிடம் என்பதும்,'டவுட்'டே இல்லாத உண்மை!

தமிழக துணை முதல்வர் உதயநிதி: அரசு திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டுவதை, பழனிசாமி விமர்சித்துள்ளார். கருணாநிதி பெயரை வைக்காமல்யார் பெயரை வைப்பது? யார் பெயரை வைக்க வேண்டுமோ, அதைத்தான் வைப்போம். மக்கள்நலனுக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்தும்போதுவிமர்சனங்கள் வரத்தான் செய்யும்.



டவுட் தனபாலு: அரசு திட்டங்கள்என்பது, எல்லா மக்களுக்கும் பொதுவானது... அந்த மக்கள் எல்லாருக்கும் கருணாநிதியின்கொள்கைகள் பிடிக்குமா என்ற,'டவுட்' எழுதே... நீங்க, உங்க கட்சிபணத்தில் நலத்திட்டங்களை செய்து,அதற்கு கருணாநிதி பெயரை சூட்டினால், உங்களை யாரும் குறை சொல்லப் போறதில்லையே!

தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புகுழு தலைவர் ஹெச்.ராஜா: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்ஜெயகுமார், என்ன பேசுகிறார்என அவருக்கே தெரியவில்லை.போகிற போக்கில், 'எனக்கு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை; ஒட்டும் இல்லை, உறவும் இல்லை' என பேசி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஜெயகுமார் பேச்சு அப்படியொரு அபத்தம்.



டவுட் தனபாலு: அது சரி... ஜெயகுமார் போல, 'அ.தி.மு.க.,உடன் இனி எக்காலத்திலும் ஒட்டும்இல்லை; உறவும் இல்லை'ன்னு உங்களால ஏன் துணிச்சலா சொல்ல முடியலை...? அதுக்கு உங்களுக்கு அதிகாரம் இல்லையாஅல்லது எதிர்காலத்தில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையலாம்னு நினைச்சு அடக்கி வாசிக்கிறீங்களா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us