sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

"டவுட்' தனபாலு

/

"டவுட்' தனபாலு

"டவுட்' தனபாலு

"டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஆக 21, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 21, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பு: ஐந்து ஆண்டுகளில், 75 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாகவும், 50 சதவீதத்திற்கு அதிகமாக உற்பத்தித் திறனை உயர்த்தவும், பயிர் செய்யும் திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.டவுட் தனபாலு: கேட்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கு...

ஆனா, இதுக்கு ஒரே வழி, விவசாய நிலத்தை வித்துடறது தான் போல... வேற எந்த சூழ்நிலையிலயும், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பிருக்கிற மாதிரி தெரியலை...!



சென்னை புறநகர் கமிஷனர் ராஜேஷ்தாஸ்'ராகிங்'கைத் தடுக்க, கல்லூரிகளில் புகார் பெட்டி வைக்கப்படும். எனவே மாணவர்கள், தைரியமாக புகாரை எழுதி போடலாம்.டவுட் தனபாலு: போடலாம் தான்... அந்தப் புகாரை நீங்க படிச்சு, நடவடிக்கை எடுக்கிறதுக்குள்ள, புறநகர் போலீஸ் கமிஷனரகத்தை, மாநகரத்தோட இணைச்சுட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு கேள்வி வருதே...!



நாம் தமிழர் இயக்க நிறுவனர் சீமான்: உலகில் உள்ள 130 நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்திருக்கின்றன. மற்ற 80 நாடுகள், அதை அறவே ஒதுக்கி வைத்துள்ளன. ஆனால்,

புத்தனும், காந்தியும் பிறந்த தேசம் தான், அதைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. மரண தண்டனை கொடுப்பதால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பது அடிப்படை ஆதாரமில்லாத தகவல்.டவுட் தனபாலு: சரி... மரண தண்டனை கொடுக்காமல் விடுவதால், குற்றங்கள் குறைந்துவிடும்னு ஏதாவது அடிப்படை ஆதாரமுள்ள தகவல் இருக்கா...?



தமிழக முதல்வர் ஜெயலலிதா: உயிர்களைக் காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகா விஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ந்து கொண்டாடும் அனைவருக்கும் என் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



டவுட் தனபாலு: அடேயப்பா... இதுல எனக்கு ஒரு, 'டவுட்'டும் இல்லை... ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸ்சுக்கும் மட்டுமில்லாம; கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்றது கடமை தான்னு நினைக்கிற ஒரு முதல்வர், உங்களுக்குப் பிறகு கிடைக்குமாங்கிறது மட்டும் தான், 'டவுட்...!'



ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று இளம் தமிழர்களுடைய உயிர்களைக் காப்பதற்காகவும், அறிவிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைத் தடுப்பதற்காகவும், 22ம் தேதி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.



டவுட் தனபாலு: இவங்களாவது 40 வயதைக் கடந்துட்டாங்க... மும்பை தாக்குதல் வழக்குல கைதாகியிருக்கிற அஜ்மல் கசாப் என்ற சிறுபான்மை இன இளைஞன், இப்போ தான், 20 வயதைத் தொட்டிருக்கான்... அவனுக்காகவும் ஒரு பொதுக்கூட்டம் நடத்திடுங்க... இளைஞர்களுக்காக போராடின மாதிரியும் ஆச்சு; மதச்சார்பின்மையை நிலைநாட்டின மாதிரியும் ஆச்சு...!



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவில் பணக்காரர்களும், உயர் ஜாதியினரும் தான் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆதிக்க சக்தியினர் விதித்த கட்டுப்பாடுகளால் தான், உயர் கல்வி வாய்ப்புகள், அனைவருக்கும் எட்டாக் கனியாக இருந்தன.



டவுட் தனபாலு: அப்படியா...? எட்டாக்கனியா இருந்ததா...? அப்புறம் எப்படி உங்களுக்கும், உங்க சின்ன ஐயாவுக்கும் மருத்துவப் படிப்பு, எட்டும் கனியா இருந்தது...? படிச்சு தானே இடம்பிடிச்சீங்க...? அப்புறம்...?








      Dinamalar
      Follow us