PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்பொன்னையன்: 'பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்வரை அனைவரும் கூறியுள்ளனர்.'சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்டோரை கட்சியில்எந்த காலத்திலும் இணைக்கக் கூடாது' எனவும், தொண்டர்கள் நினைக்கின்றனர்.
டவுட் தனபாலு: 'பெரியம்மா ஜெயலலிதாவின் மனசாட்சியாக திகழ்ந்து, அவரது புகழுக்கு உறுதுணையாக இருந்தவர்சின்னம்மா சசிகலா. ஜெயலலிதாவின் உடல்நிலையைகாப்பதில், தியாக செம்மலாக திகழ்ந்தவர் சின்னம்மா சசிகலா'என, ஒரு காலத்தில் புகழாரம் சூட்டிய பொன்னையனா இது என்ற, 'டவுட்' வருதே!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: 'பொதுக்கூட்டம்அல்லது கட்சி நிகழ்ச்சி நடக்கும்இடத்தில் உரிய அனுமதி பெற்று,ஒன்று அல்லது இரண்டு பேனர்களை பாதுகாப்பாக வைக்கலாம்.இந்த அறிவுரையை யாரேனும் மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த அறிவுரையை-ஒருசிலர் பின்பற்றாத வகையில்நடந்து கொள்வதாக தகவல்கள்வந்துள்ளன. அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: உதயநிதி பிறந்த நாளுக்கு தமிழகம் முழுக்க, தெருவுக்கு தெரு பேனர்கள் வச்சிருந்தாங்களே... அதுக்கு ஒருவாரம் முன்னாடியே இப்படி ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தால்,'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டியிருக்கலாம்!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: சாத்தனுார்அணையை திறப்பது தமிழக அரசின் முடிவு தான்; அதை திறந்து விட்டது தவறு தான். அங்குள்ள பொறியாளர், நீர்வளதுறை அமைச்சர் ஆகியோர் என்ன செய்தனர் என்ற கேள்விகளை நாங்கள் சட்டசபையில் கேட்க உள்ளோம். யார் தவறு செய்தாலும் கட்டாயம் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்.
டவுட் தனபாலு: சட்டசபையில்நீங்க கேட்டாலும், உரிய பதில்கிடைக்குமா என்பது, 'டவுட்'தான்...அதுவும் இல்லாம, கூட்டணி கட்சியா இருந்துட்டே, குடைச்சல் தர்றாங்களேன்னு கோபப்பட்டு, அடுத்த தேர்தல்ல 'சீட்'களை குறைச்சாலும் குறைச்சிடுவாங்கஎன்பதில், 'டவுட்'டே இல்லை!