தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: நவ. 23

‘டவுட்’ தனபாலு: நவ. 23

‘டவுட்’ தனபாலு: நவ. 23


PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலு: தி.மு.க., ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த நெடுஞ்சாலைத் துறையில், அனைத்து ‘டெண்டர்’களும் ஒளிவு மறைவின்றி நடந்தன. ஐந்தாண்டுகள் அமைச்சராக இருந்த எனக்கும், தற்போதைய த.வெ.க., அரசின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில், உண்மைக்கு மாறான தகவல்களை அவர் பரப்பி வருகிறார். இதனால் என் மானம், மரியாதை முழு அளவில் பாதிக்கப்படுகிறது. எனக்கு நீதி கிடைப்பதற்காக, உயர் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்.

டவுட் தனபாலு: நல்லா நாடுங்க... அதேநேரம், பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரா, உங்க கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு இப்படித் தான் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துட்டு, கோர்ட்ல அண்ணா மலையின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாம, வழக்கை வாபஸ் வாங்கிட்டாரு... அதே மாதிரி நீங்களும் செய்யாம இருப்பீங்களா என்ற, ‘டவுட்’ வருதே!

lll

காங்., தமிழக முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை: எங்கள் கட்சியைச் சேர்ந்த தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், ‘செல்வப்பெருந்தகை தற்போது எந்த கட்சியில் இருக்கிறார்; இனி, எந்த கட்சிக்கு செல்லப் போகிறார்?’ என கேள்வி எழுப்பியுள்ளார். என் பயணம் தொடரும். விமர்சனங்களை கண்டு விலகவும் மாட்டேன்; அவதுாறு களை கண்டு அஞ்சவும் மாட்டேன். இது தான் என் அடையாளம்; இது தான் என் அரசியல்.

டவுட் தனபாலு: ‘இனி எந்த கட்சிக்கும் போக மாட்டேன்... ராகுலை பிரதமர் பதவியில் அமர வைக்க, அயராம கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன்’னு சொல்லாம, வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் வதக்கிய மாதிரி வழவழா, கொழகொழன்னு நீங்க பதில் சொல்றதே, ஏகப்பட்ட ‘டவுட்’களை கிளப்புதே!

lll

இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன்: த.வெ.க.,வுடன் நாங்கள் கூட்டணியிலும் இல்லை; அமைச்சரவையிலும் இடம் பெறவில்லை; அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம். சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தால், அது குறித்து அந்த நேரத்தில் கட்சி முடிவு செய்யும்.

டவுட் தனபாலு: த.வெ.க., அரசு அஞ்சு வருஷங்களும் நீடிக்கணும்னு தான், அதுக்கு ஆதரவு அளிப்பதா ஆரம்பத்துல சொன்னீங்க... இப்ப, ‘அந்த நேரத்தில் முடிவு எடுப்போம்’னு மாத்தி பேசுறீங்களே... உங்களை எல்லாம் நம்பி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திச்சா, த.வெ.க., அரசை நட்டாற்றில் விட்டுடுவீங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us