PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புகுழு அமைப்பாளர் ஹெச்.ராஜா: விஜய், தி.மு.க., ஓட்டுகளை பெறுவார். திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொள்கைகளை தான், அவர் கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப சொல்கிறார். அதை தவிர்த்து மேலும் ஓட்டுகள் செல்கிறது என்றால், அது அ.தி.மு.க.,வில் இருந்து தான் செல்லும்; மற்றபடிபா.ஜ., ஓட்டுகள் அவருக்கு போகாது.
டவுட் தனபாலு: இப்பல்லாம் கொள்கையை பார்த்து யாருங்க ஓட்டு போடுறா...? நோட்டுக்கு ஓட்டு என்ற கணக்கை தானே பலரும் பார்க்கிறாங்க... அதனால,திராவிட கட்சிகள் பொழிய விடும் பணமழைக்கு முன்னாடி,விஜய் கட்சி வெற்றி பெற முடியுமா என்பது, 'டவுட்'தான்!
வி.சி., தலைவர் திருமாவளவன்:வி.சி.,க்களை பொறுத்தவரை, கட்சியின் துணை பொதுச்செயலராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் எதிர்கால நலனுக்காக என்ன பேசினாலும்அது சரிதான். அதேபோல, கட்சியில் சீனியர்களாக இருக்கும் துணை பொதுச்செயலர்கள் ரவிகுமார், வன்னியரசு ஆகியோர் கட்சி நலனுடன் சேர்த்து கூட்டணி நலனுக்காக பேசியதும் சரியானதுதான். அதற்காக, கட்சியில் யாரையும், 'கருத்து சொல்லாதீர்கள்' என, தடுக்க முடியாது; தடுக்கவும் தேவையில்லை.
டவுட் தனபாலு: உதயநிதியைவிமர்சித்து பேசியதையும், அதை கண்டித்தவர் பேச்சும் சரின்னு சொல்றீங்களே... உங்க கட்சியில கட்டுப்பாடு கிடையாதா...தி.மு.க., தரப்பிலும் இதே முடிவை எடுத்துட்டா, ஒரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விமர்சனத்துக்கு நீங்க தாங்குவீங்களா என்பது, 'டவுட்' தான்!
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர்ராகுல்: இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி., ஆகிய அனைத்தும் மக்களை பொருளாதார ரீதியாக பாதிக்க வடிவமைக்கப்பட்டுஉள்ளன. பெரிய நிறுவனங்களின் ஆதிக்கத்தால் சிறு, குறு நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. இதனால், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கின்றனர்.
டவுட் தனபாலு: காங்., ஆட்சியில்இறக்குமதிக்கு வரி விதிக்காம, இலவசமாகவே இறக்குமதி பண்ண அனுமதிச்சீங்களா, என்ன... அதே மாதிரி, ஜி.எஸ்.டி.,என்ற வரியை அறிமுகப்படுத்தியதே உங்க ஆட்சியில் தான் என்பதை மறந்துட்டு பேசுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!