PUBLISHED ON : அக் 05, 2024 12:00 AM

பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா: அரசியல் நாடகத்தின் ஒட்டுமொத்த சாசனம் உளுந்துார்பேட்டையில் நடந்த வி.சி., மாநாடு. மது விலக்கிற்காக வி.சி., நடத்திய மாநாட்டில் அதன் தலைவர் திருமாவளவன், மது தொழிற்சாலைகளை நடத்தும் தி.மு.க.,வினரையும் அழைத்து நாடகம் நடத்துகிறாரா. தமிழகத்தில் வி.சி., - தி.மு.க., மக்களை ஏமாற்றுகின்றன.
டவுட் தனபாலு: ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் வி.சி.,க்களும் கட்சி நடத்தணுமே...போராட்டம் எதுவும் பண்ண முடியாது... அதனால, இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை அப்பப்ப நடத்தி, கட்சியை உயிரோட்டமா வச்சிருக்காங்களோஎன்ற, 'டவுட்' தான் வருது!
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர் பினராயிவிஜயன்: வயநாட்டில் பேரிடர் ஏற்பட்டு, 200க்கும் மேற்பட்டோர்பலியாயினர்; பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியாகஇதுவரை எதுவுமே வரவில்லை.மத்திய அரசு உதவி செய்வதாக உறுதி அளித்திருந்தும், அதை நிறைவேற்ற மறுக்கிறது.
டவுட் தனபாலு: எங்க ஊர்ல போன வருஷம் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்கே இதுவரை மத்திய அரசு நிதி தரலை... இப்ப, உங்களுக்கும் கையை விரிச்சுட்டாங்களா... 'எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது' என்ற குற்றச்சாட்டு உண்மை தானோ என்ற, 'டவுட்'தான் வருது!
நாம் தமிழர் கட்சியின், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் சுகுமார்: இரண்டு லோக்சபா, இரண்டு சட்டசபை, ஒரு உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக வேலை செய்தேன்; எங்களுக்கான மரியாதை மற்றும்அங்கீகாரத்தை சீமானால் தர முடியவில்லை. ஆனால் சீமான், 'உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும், செலவு செய்யவும் கூறவில்லை. நான் செய்வதை தான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள்; இல்லாவிட்டால் கிளம்புங்கள்' என்று கூறியதன் அடிப்படையில், கட்சியின் அனைத்து பொறுப்புகள்மற்றும் அடிப்படை உறுப்பினர்பொறுப்பில் இருந்தும்விலகுகிறேன்.
டவுட் தனபாலு: 'கட்சி வேகமா வளர்ந்துட்டு வருது'ன்னு சீமான்தம்பட்டம் அடிச்சுக்கிறாரு... மறுபக்கம், கொத்து கொத்தா நிர்வாகிகள் பிய்ச்சுக்கிட்டு ஓடுறாங்க... சீமான் கட்சியிலும், உள்கட்சி ஜனநாயகம் மருந்துக்கும் இல்லை என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!