PUBLISHED ON : அக் 13, 2024 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: மத்தியில் காங்., கூட்டணி ஆட்சி நடந்தபோது, 2010 டிசம்பரில், 'நீட்' தேர்வுக்காக,'நோட்டிபிகேஷன்' வெளியிட்டனர்.அப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்தகாந்திசெல்வன், சுகாதாரத் துறைஇணை அமைச்சராக இருந்தார்.அதனால், நீட் தேர்வை கொண்டுவந்தது, தி.மு.க., - காங்., தான்.நீட் தேர்வை கொண்டுவர காரணமாக இருந்துவிட்டு, இங்குஇரட்டை வேடம் போடுகின்றனர்.
டவுட் தனபாலு: பா.ஜ., கூட்டணியில் நீங்க இருந்தப்ப, வேளாண் திருத்த சட்டங்களுக்கு ஆதரவு குடுத்துட்டு, கூட்டணியிலஇருந்து வெளியேறியதும், அந்த சட்டங்களை எதிர்த்ததற்கு பெயர், இரட்டை வேடம் இல்லையா என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., பொருளாளர்திண்டுக்கல் சீனிவாசன்:திருமாவளவனை அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், 'நீங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க.,வும் பங்கேற்கும். ஆனால், அரசுக்கு எதிராக எவ்வித தீர்மானமும்போடக்கூடாது; மாநாட்டு செலவுகளை அமைச்சர்கள் நேரு மற்றும் வேலு ஏற்றுக்கொள்வர்' என, கூறி உள்ளார். இதன்படி, தி.மு.க., செலவிலேயே,அவர்கள் நடத்தும் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய மாநாட்டை நடத்தி விட்டார் திருமாவளவன்;இதனால்தான், அவரை கில்லாடிஅரசியல்வாதி என, கூறுகிறேன்.
டவுட் தனபாலு: மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தஉங்க முன்னாள் தலைவி ஜெ.,யைபார்க்காமலேயே, 'பார்த்துட்டேன்...அம்மா நல்லா இருக்காங்க... இட்லி, வடை சாப்பிட்டாங்க'ன்னுஅளந்து விட்டீங்களே... அந்த கில்லாடித்தனம் முன்னாடி, திருமாவளவன் நிற்க முடியுமா என்பது, 'டவுட்' தான்!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்புக்காகவிடுதலை சிறுத்தைகள் நடத்தியமாநாடு, முழுக்க முழுக்க எங்கள்கட்சி சார்பிலானது. அம்மாநாட்டுசெலவை, தி.மு.க., ஏற்றுக்கொண்டதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இதுஎங்களுக்கு எதிரானது மட்டுமல்ல... அபாண்டமானது; அவதுாறானது. யாரிடமும் பணம் பெற்று, மாநாடு நடத்த வேண்டிய அவசியம், வி.சி.,க்களுக்கு இல்லை.
டவுட் தனபாலு: நீங்க நடத்தியமாநாட்டுக்கு எப்படியும், 10 கோடிரூபாய் செலவாகியிருக்கும்... தி.மு.க., தரப்பு, 'ஸ்பான்சர்' பண்ணலைன்னா, அந்த பணத்தை எப்படி திரட்டுனீங்கஎன்பதை தெளிவாகசொல்லாதது, பல 'டவுட்'களை அதிகப்படுத்துதே!