PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி: தமிழகத்தில் மழை பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், முதல்வர் ஸ்டாலின்,கடந்த மூன்று மாதங்களாக ஐந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உள்ளார். இதில், நீர் வளம், பொதுப்பணித் துறை அமைச்சர்கள், சென்னையில்உள்ள அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசித்து, அதற்கானஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டவுட் தனபாலு: ஆரம்பம்எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா, 'பினிஷிங்'ல தான் கோட்டை விட்டுடுறீங்க... மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி, வெள்ளத்துல மக்கள் மிதக்குறப்ப அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் மாயமாகாமஓடோடி உதவிக்கு வந்தா, 'டவுட்'டே இல்லாம அரசை பாராட்டலாம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள்பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா: தீபாவளிஉள்ளிட்ட பண்டிகை காலங்களில்,சோதனை என்ற பெயரில் அதிகாரிகள், வணிகர்களுக்கு அச்சுறுத்தல் தருவது கண்டிக்கத்தக்கது. வியாபாரிகளை மிரட்டி வழக்குப்பதிவு செய்வதை அதிகாரிகள் கைவிட வேண்டும். இல்லையென்றால், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: இதை,வழக்கமான வெற்று மிரட்டலா அதிகாரிகள் எடுத்துக்கக் கூடாது... ஏன்னா, இவரது மகன் பிரபாகர ராஜா, விருகம்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்காரு... மகன் வாயிலா முதல்வர் கவனத்துக்கு விஷயத்தை எடுத்துட்டு போய், அதிகாரிகள் மீது கண்டிப்பா நடவடிக்கை எடுத்துடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. மக்கள் மத்தியில் ஒரே பேச்சு என்னவென்றால், அ.தி.மு.க., ஆட்சி எப்போது வரும் என்பதுதான். அ.தி.மு.க.,ஒரு தோல்வியை சந்தித்தால்,அடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது, கடந்த கால சரித்திர உண்மை.
டவுட் தனபாலு: அடுத்தடுத்து ரெண்டு தேர்தலில் ஜெயித்த கட்சி என்ற சாதனையை எம்.ஜி.ஆரும், ஜெ.,யும் நிகழ்த்திகாட்டுனாங்க... அவங்க அளவுக்குஇல்லாட்டியும், வர்ற தேர்தலில்ஆட்சியை பிடிச்சாலே, பழனிசாமிக்கு அது உலக சாதனைதான் என்பதில், 'டவுட்'டே இல்லை!