PUBLISHED ON : அக் 20, 2024 12:00 AM

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு: தெலுங்கு தேசம், மாநில கட்சியாகஇருந்தாலும், தேசிய அரசியலில்எப்போதும் முக்கிய பங்காற்றிஉள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 10.50 லட்சம் கோடி ரூபாய் கடனை விட்டு சென்றுள்ளார். மத்தியஅரசின் உதவியால் சமாளிக்கிறோம்; இல்லைஎன்றால் நிலைமை மோசமாகிஇருக்கும்.
டவுட் தனபாலு: மத்திய பா.ஜ., அரசு நீடித்திருக்க உங்க கட்சி எம்.பி.,க்களின் தயவு தேவைப்படுதே... அதனால, அடுத்த அஞ்சு வருஷத்துக்கு உங்க மாநிலத்துல நிதி நெருக்கடியே வராது என்பதில், 'டவுட்'டே இல்லை!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஜெயலலிதா மறைவுக்குபின், துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, கட்சிக்குள் அதர்மங்கள் அதிகரித்து, துரோக செயல்கள்தாண்டவமாடி, கட்சி அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. அனைவருக்குமான கட்சி அ.தி.மு.க., என்ற நிலை, துரோககூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க., இன்று வெற்றிடமாக காட்சி அளிக்கிறது.
டவுட் தனபாலு: ஜெ.,மரணத்துக்கு பின், நீங்க தானே முதல்வர் பதவிக்கு வந்தீங்க... உங்களை விலக்கிட்டு, சசிகலா அந்த இடத்துக்கு வர முயற்சிக்க, நீங்க தர்மயுத்தம் நடத்த, கூவத்துார்கூத்துகள் அரங்கேறி, அப்புறம் தானேபழனிசாமி ஆட்சிக்கு வந்தாரு...எது எப்படியோ... அ.தி.மு.க.,வின்இன்றைய நிலைக்கு பிள்ளையார்சுழி போட்டது நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'ஆவின் கிரீன் மேஜிக்' பச்சை உறை பாலில் உள்ள அதே, 4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்ட பாலை, 'ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற பெயரில், திருச்சி மண்டலத்தில்ஆவின் அறிமுகம் செய்துள்ளது.கிரீன் மேஜிக் 1 லிட்டர், 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மி.லி., 50 ரூபாய் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கிரீன் மேஜிக் பாலை நிறுத்துவதே,ஆவினின் திட்டம் என கூறப்படுகிறது; இது வணிக அறம் அல்ல.
டவுட் தனபாலு: என்ன தான் அமைச்சர் மாறினாலும், ஆவின் நிர்வாகத்துல எந்த மாற்றமும் வந்த மாதிரி தெரியலை...'தனியாருக்கு போட்டியா செயல்படுறோம்'னு, அவங்களைமாதிரியே, ஆவினும் வணிக அறத்தை காத்துல பறக்க விட்டுடுச்சோ என்ற, 'டவுட்'தான் வருது!