sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி: அ.தி.மு.க., மூன்றாக, நான்காகஉடைந்து விட்டது என சிலர் பேசி வருகின்றனர்.அ.தி.மு.க.,வில் பதவிக்கு ஆசைப்பட்டு வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனரே தவிர, கட்சியில் பிளவு இல்லை. கட்டுக்கோப்போடு உள்ளஅ.தி.மு.க., இயக்கத்தை, யாராலும்உடைக்க முடியாது; தொண்டர்கள்,பொதுச்செயலர் பழனிசாமி பக்கம் தான் உள்ளனர்.

டவுட் தனபாலு: தொண்டர்கள்,பழனிசாமி பக்கம் இருக்கலாம்...ஆனா, வெறும் தொண்டர்களின்ஓட்டுகளை மட்டும் வாங்கி, ஆட்சிக்கு வந்துட முடியுமா... மக்கள் மனசுல பழனிசாமி இடம் பிடித்தால் தான், மறுபடியும்அ.தி.மு.க., ஆட்சி அமையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தமிழக சட்டத்துறை அமைச்சர்ரகுபதி: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளில், திராவிடம் என்ற பெயர் உள்ளது.தமிழகத்தில் உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்தவை தான். புதிய கட்சி துவங்குபவர்களும் திராவிட பெயர் கொண்டு தான் துவங்குகின்றனர். திராவிடம்என்பது தமிழ் மண்ணில் ஊறிப்போன ஒன்று.

டவுட் தனபாலு: உங்க கருத்துப்படி, தென்மாநிலங்கள்ஒன்றிணைந்தது தானே திராவிடம்... ஆனா, பக்கத்துல இருக்கும் கர்நாடகா, கேரளாவுலஎல்லாம் உங்க, 'இண்டியா' கூட்டணி கட்சிகள் தானேஆட்சியில் இருக்கின்றன... அந்த கட்சித் தலைவர்கள் திராவிடத்தை ஏத்துக்கிறாங்களாஎன்ற, 'டவுட்'டுக்கு உங்களிடம் விடை இருக்கா?





நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான்: வரும் சட்டசபை தேர்தலிலும், நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். என்னுடைய 8 சதவீதம் ஓட்டு, 32 சதவீதமாக மாறும்போது, தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியினர் என்னோடு கூட்டணி பேச வருவர்.

டவுட் தனபாலு: கடந்த, 2010ம் ஆண்டு தான் நீங்க நேரடி அரசியலுக்கு வந்தீங்க... இந்த 8 சதவீதத்தை எட்டிபிடிக்கவே, உங்களுக்கு கிட்டத்தட்ட 14 வருஷம் ஆகியிருக்கு... நீங்க சொல்ற 32 சதவீதம் ஓட்டு வங்கி இலக்கை அடைய, அரை நுாற்றாண்டாவது ஆகும்என்பதில், 'டவுட்'டே இல்லை!








      Dinamalar
      Follow us