PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: மதுவிலக்கை மாநிலஅரசு மட்டும் செய்ய முடியாது; மத்திய அரசோடு இணைந்து தான்செய்ய வேண்டும். மாநில அரசுமதுவிலக்கை கொண்டு வந்தால்,வேறு மாநிலத்திற்கு சென்று குடிப்பர்; கள்ளச்சாராயம் பெருகும். எனவே, மத்திய, மாநிலஅரசுகள் இணைந்து தான், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
டவுட் தனபாலு: மாநில அரசு மதுவிலக்கை கொண்டு வந்துட்டா,எல்லா, 'குடி'மகன்களும் வண்டிபிடிச்சு பக்கத்து மாநிலங்களுக்குபடையெடுத்து போயிடுவாங்களாஎன்ன...? ஆளுங்கட்சிக்கு முட்டுகொடுக்கவே, இந்த மாதிரி வெட்டி வாதங்களை நீங்க அடுக்குவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
அ.தி.மு.க., பொருளாளர் சீனிவாசன்: கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் சொல்ல வேண்டியது. எல்லாரும் தனித்துநின்றால், அ.தி.மு.க.,வும் தனித்துநிற்க தயாராக உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, பழனிசாமி மீண்டும் முதல்வராக நிச்சயம் வருவார்.
டவுட் தனபாலு: ஜெ.,தலைமையிலான அ.தி.மு.க., தனியாக நின்று, 2014 லோக்சபாதேர்தல், 2016 சட்டசபை தேர்தலில்வெற்றிக்கொடி நாட்டியிருக்கே...உங்க கட்சிக்கு அப்ப இருந்த மக்கள் செல்வாக்கு இப்ப இல்லையா அல்லது பழனிசாமி தலைமை மீது நம்பிக்கையில்லாமகூட்டணி தேடுறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மதுவால் மட்டும், தமிழகத்தில்ஆண்டுக்கு 2 லட்சம் பேர்உயிரிழக்கின்றனர். தேசிய அளவில் அதிக விபத்துகள், அதிக தற்கொலைகள், அதிக மனநல பாதிப்புகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. 'மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ள நிலையில், இனியும் மத்திய அரசை காரணம் காட்டி கொண்டு இருக்காமல், தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
டவுட் தனபாலு: மதுவிலக்கைஅமல்படுத்திட்டா, ஆளுங்கட்சிக்குகஜானாவாக இருக்கும், நான்கைந்து பெருந்தலைகள் நடத்தும் மதுபான ஆலைகள் நஷ்டத்துல தள்ளாடிடுமே... அவங்க நஷ்டப்பட்டா, ஆளுங்கட்சிக்கு நிதி வரும் வழி அடைபட்டு, வாக்காளர்களை, 'வளைக்க' முடியாம, தேர்தலில் பாதிப்பு வருமே... அதனால, மதுவிலக்கு என்ற தேன்கூட்டில் கை வைப்பாங்களா என்பது, 'டவுட்' தான்!