PUBLISHED ON : அக் 29, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்வைகை செல்வன்: நடிகர் விஜயால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு இல்லை. அவருடன் அ.தி.மு.க., கூட்டணி அமையுமாஎன்பது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது. விஜய் தன்கொள்கையில் எந்த அளவுக்குநிற்கிறார்; அதற்காக எந்த அளவுக்கு போராட்டங்களை நடத்துகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும். அதன் பின்னரே, கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும்.
டவுட் தனபாலு: தன் தலைமையில், 2026ல் கூட்டணிஆட்சி என்பதை விஜய் தெளிவாகஅறிவிச்சுட்டாரே... அதனால, உங்ககூட்டணிக்கு அவர் வர வாய்ப்பே இல்லை... ஒருவேளை,'தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்என்பதற்காக, அவரது கூட்டணிக்குபோகவும் தயார்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி: தி.மு.க., எப்போதும்விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும். ஊழலுக்காகவே கலைக்கப்பட்டது தி.மு.க., ஆட்சிதான். 'டாஸ்மாக், பார்' போன்றவற்றில் ஊழல் செய்தனர். மது பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றனர். இதன் வாயிலாக, ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய் வரும் வருமானம் எங்கே செல்கிறது?
டவுட் தனபாலு: டாஸ்மாக் கடைகள்ல உங்க ஆட்சியிலும் தான், பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூல் செஞ்சாங்க... அந்த பணம் எல்லாம் அப்ப எந்தெந்த அதிகார மையங்களுக்குபோனதோ, அதே மையங்களுக்குதான் இப்பவும் தங்கு தடையில்லாமபோகுது என்பதில், 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நடிகர் விஜயின் மாநாடு, மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். திரைப்புகழில் உள்ளவர்களுக்கு வீச்சும், ரீச்சும் அதிகம். நாங்கள் அரசியலுக்கு வரும்போது அப்படி இருக்கவில்லை. விஜயை பார்க்க கூட்டம் கூடும்; அது ஓட்டுகளாகமாறாது என்பதை விட்டு விடுங்கள். அதை மக்கள்தீர்மானிக்கட்டும். தற்போது தான்அவர் கருத்தரித்துள்ளார். பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என ஏன்இப்போதே சண்டையிட வேண்டும்?
டவுட் தனபாலு: எதிர்காலத்தில்விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டிய சூழல் வந்தாலும்வரலாம்... அதனால, அவர்கட்சியை விமர்சித்து பேசாம, இப்பவே அடக்கி வாசிக்குறீங் களோ என்ற, 'டவுட்' தான் வருது!

