PUBLISHED ON : அக் 30, 2024 12:00 AM

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்:துணை முதல்வர் உதயநிதி, 'கல்லுாரிகளிலும், பல்கலைகளிலும் சங்கிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது' என்று, அப்பட்டமான புரட்டு கருத்துக்களைகூறியுள்ளது கண்டனத்துக்குரியது.பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, 'தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் பொதுவானஅமைச்சராக செயல்படுவேன்' என சொல்லித் தான் பதவிஏற்றாரே தவிர, அவரின் கட்சி நிலைப்பாடான திராவிடக்கருத்தியல்கள் கொண்ட இயக்கத்தினருக்கு மட்டுமே பதவி ஏற்கவில்லை.
டவுட் தனபாலு: அதானே... திராவிட இயக்கத்தினர் மட்டும் கல்லுாரிகளிலும், பல்கலைகளிலும் போய் அவங்க கொள்கைகளை முழங்கலாமா...?அதே நேரம், மாற்றுக் கருத்து கொண்டவர்களை சங்கிகள் எனவிமர்சிப்பது, உதயநிதி வகிக்கும்பதவிக்கு பெருமை சேர்க்குமா என்பது, 'டவுட்' தான்!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: புதிய கட்சி துவக்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். விஜய் பேசும் அரசியல் முற்போக்கானதா அல்லதுபிற்போக்கானதா; எவ்வளவு காலத்திற்கு பேசப் போகிறார்;உறுதியாக இருப்பாரா என்பதுஎல்லாம் போகப் போகத் தான் தெரியும். நேற்று பிறந்திருக்கிறதுஒரு புதிய குழந்தை; விமர்சனம்அதிகம் செய்ய வேண்டாம்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வின் பிரதான கூட்டணி கட்சியான நீங்க,'விஜய் கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை' என்றல்லவா, 'பளிச்'னு சொல்லியிருக்கணும்...அதை விடுத்து, இப்படி பூசி மெழுகுவதை பார்த்தால், 'ஆட்சியில் பங்கு' என, விஜய் அடித்த சிக்ஸர், உங்க மனசிலும் சலனத்தை உண்டாக்கிடுச்சோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக சபாநாயகர் அப்பாவு:விஜய் கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், புதுச்சேரியைச்சேர்ந்தவர்; எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். அங்குள்ள பா.ஜ.,அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வேண்டப்பட்டவர். பா.ஜ., மூத்ததலைவர் அமித் ஷா உள்ளிட்டதலைவர்களுடன் அவருக்குநெருக்கமான உறவு உண்டு எனகூறப்படுகிறது. பா.ஜ.,வினர், நடிகர் ரஜினியை வைத்து கட்சி துவங்க முயற்சித்தனர். அவர் முன்வராததால், நடிகர் விஜயை வைத்து கட்சி துவங்கியிருப்பதாக கூறுகின்றனர்.
டவுட் தனபாலு: ஆளுங்கட்சிக்குஎதிராக கட்சி துவங்கிட்டாருஎன்பதால, விஜயை பா.ஜ.,வின்,'பி டீம்' மாதிரி சித்தரிப்பது எல்லாம், விஜய் படத்தை மிஞ்சியகற்பனை என்பதில், 'டவுட்'டே இல்லை!

