PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM

நடிகர் ரஜினிகாந்த்: சினிமாவில்இருந்து அரசியலுக்கு வந்த விஜய், தன் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தியது குறித்து கேட்கிறீர்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மிகப்பெரியவெற்றி அடைந்துள்ளது; விஜய்க்குஎன் வாழ்த்துகள்.
டவுட் தனபாலு: நீங்களும் கிட்டத்தட்ட, 50 வருஷமா நடிக்குறீங்க... உங்களுக்கு பின்னாடி நடிக்க வந்த விஜய், கால் நுாற்றாண்டுலயே, அரசியல் கட்சி துவங்கிட்டாரு... ஆனா, உங்களை நம்பி வந்த ரசிகர்களை நீங்க தான் நட்டாத்துல விட்டுட்டு போயிட்டீங்க என்பதில்,'டவுட்'டே இல்லை!
'டாஸ்மாக்' மண்டல மற்றும்மாவட்ட மேலாளர்களுக்கு நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சமீபகாலமாக மதுக் கடைகளில்கூடுதல் விலை வைத்து விற்பதாகபுகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க, கூடுதலாக, 10 ரூபாய் அல்லது அதற்கு மேல்விலை வைத்து விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கைஎடுப்பதுடன், அக்கடை பணியில்உள்ள மேற்பார்வையாளர் உட்படஅனைவரையும் கூட்டு பொறுப்பாக்கி, அவர்களை உடனே தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: இந்த சுற்றறிக்கையால நிறைய ஊழியர்கள்,மேற்பார்வையாளர்கள்,'சஸ்பெண்ட்' ஆவாங்க... அப்புறம்,'கடைகள்ல, 'சரக்கு' விற்க ஆட்கள்இல்லை'ன்னு அவங்க சஸ்பெண்டை ரத்து பண்ணி, மறுபடியும் சேர்த்துக்குவீங்க... சஸ்பெண்ட் ரத்துக்குன்னு தனியாஒரு வசூல் வேட்டை நடக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., இலக்கிய அணி துணைச் செயலர் பட்டுக்கோட்டைசின்ன சுவாமிநாதன்: முதல்வர் வேட்பாளருக்கு மட்டும் செங்கோல்வழங்கப்படுவதில்லை. பொதுவாக, அரசியல் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கும், செல்வாக்கு பெற்றவர்களுக்கும்வழங்கப்படுகிறது. தொண்டர்கள்விருப்பத்தின்படி தான் முன்னாள்அமைச்சர் வேலுமணிக்கு செங்கோல் வழங்கப்பட்டது. செங்கோல் கொடுப்பதால் மட்டும்,ஒருவர் முதல்வர் வேட்பாளராகமுடியாது. அதேசமயம், முதல்வர்வேட்பாளருக்கு தான் செங்கோல்வழங்க வேண்டும் என, எந்த விதிமுறையும் இல்லை.
டவுட் தனபாலு: செங்கோல் என்பது, ஆட்சி அதிகாரத்தின் அடையாளம்... ஆட்சியின் தலைமை பீடத்தில் அமர தகுதியானவங்களுக்கு தான் அதை தருவது வழக்கம்... அதனால, உங்களது சப்பைக்கட்டு சமாதானத்தை பழனிசாமி தரப்புஏத்துக்குமா என்பது, 'டவுட்'தான்!