PUBLISHED ON : நவ 13, 2024 12:00 AM

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க.,வினர் எல்லாருடைய மனதிலும்ஏக்கம் இருக்கிறது; எதிர்பார்ப்புகள் உள்ளன. நம் கட்சியினர் இப்போதே, இரண்டு பச்சை மைபேனாக்களை வாங்கி வைத்து விடுங்கள். ஒன்று, எனக்கு... மற்றொன்று, உங்கள் ஒவ்வொருவரையும் மக்கள் பிரதிநிதிகளாக, கூட்டுறவு தலைவர்களாக, உறுப்பினர்களாக, இயக்குனர்களாக ஆக்குவதற்கு;இந்த டீல் ஓகேவா?
டவுட் தனபாலு: உங்க மாவட்டத்துல, தி.மு.க.,வுக்கு ரெண்டு அமைச்சர்கள் இருக்காங்க... உங்க கட்சியினருக்கு நீங்க குடுத்துள்ள இந்த, 'ஆபரை' பார்த்துட்டு, அந்த அமைச்சர்களிடம் போய், 'எங்களுக்கும் பதவிகள் தாங்க'ன்னுதி.மு.க.,வினர் நெருக்கடி தர ஆரம்பிச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: சென்னையில்நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், நடிகை கஸ்துாரி, தெலுங்கர்கள்குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறினார். இதனால், சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கஸ்துாரியை தேடினர். கஸ்துாரியின் மொபைல் போன், ஆந்திர மாநிலத்தில் கடைசியாக,'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருப்பதால், இரண்டு தனிப்படை போலீசார், அவரை தேடி ஆந்திரா விரைந்துள்ளனர்.
டவுட் தனபாலு: புதுக்கோட்டைமாவட்டம், வேங்கைவயல் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவங்களை, ஒன்றரை வருஷமா நம்ம போலீசாரால கண்டுபிடிக்க முடியலை... ஆனா, குண்டு வச்சபயங்கரவாதியை தேடுற மாதிரி, கஸ்துாரியை தனிப்படை எல்லாம் போட்டு தேடுவது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: கடந்த லோக்சபா தேர்தலில், முடிவுகள் வரும் முன்னரே, '40 தொகுதிகளிலும்வென்று விட்டோம்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தற்போது, 2026 சட்டசபை தேர்தல் துவங்கும் முன், '200 தொகுதிகளில் வெல்வோம்' எனக் கூறி, மக்களை மூளைச் சலவை செய்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட, அதிக நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிவெல்லும்.
டவுட் தனபாலு: அது சரி... '234தொகுதிகளில், 200ல் ஜெயிப்போம்'னு முதல்வர், 'லாஜிக்'கா சொல்றதால, அதை மக்கள் ஏத்துக்குவாங்க... ஆனா, '234 தொகுதிகளிலும் ஜெயிப்போம்'னு நீங்க சொல்றதை, உங்க கட்சியினரே ஏத்துக்குவாங்களா என்பது, 'டவுட்' தான்!