PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM

அ.தி.மு.க., பொதுச் செயலர்பழனிசாமி: கடந்த 2019 லோக்சபாதேர்தலைவிட, தற்போதைய லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுகளை அ.தி.மு.க., பெற்றுள்ளது.அதேபோல, தி.மு.க., அதன் ஓட்டுசதவீதத்தை இழந்துள்ளது. இதுதான் உண்மை. ஆனால், இதை மறைத்து, தி.மு.க., ஏதோ மாபெரும் வெற்றி பெற்று விட்டது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
டவுட் தனபாலு: உங்களுக்கு ஓட்டு சதவீதம் அதிகரித்து, தி.மு.க.,வுக்கு குறைந்திருக்கலாம்... ஆனா, ரெண்டு லோக்சபா தேர்தல்லயும், தி.மு.க.,கூட்டணி தானே அமோகமா ஜெயிச்சிருக்கு... உங்களால ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியலையே... ஜனநாயகத்தில் எண்ணங்களை விட,எண்ணிக்கைக்கே மதிப்பும், மரியாதையும் கிட்டும் என்பதுதான், 'டவுட்'டே இல்லாத உண்மை!
பத்திரிகை செய்தி: நம் நாட்டின் பஞ்சாபை தனியாக பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும்நோக்கோடு செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தற்போது, கனடாவில் அந்த நாட்டு மக்களை வெளியேறும்படி மிரட்டல் விடுத்துள்ளனர்.
டவுட் தனபாலு: காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, கனடா சிவப்பு கம்பளம் விரிச்சதன் பலனை இப்ப அனுபவிக்குது... 'ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிய கதை'க்கு ஆகச்சிறந்த உதாரணம் இதுதான்என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு: அரசு ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை தி.மு.க., அரசு வழங்கி உள்ளது. அவர்கள் பாதுகாப்பாகவும் உள்ளனர். ஆனால், தி.மு.க., ஆட்சியில் அரசுஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுபோன்ற பொய்யான தோற்றத்தைஉருவாக்க முயல்கின்றனர். பல்வேறு சலுகைகளை அனுபவிக்கும் அரசு ஊழியர்கள்யாரும், தி.மு.க., அரசை விமர்சிக்க மாட்டார்கள்.
டவுட் தனபாலு: இதே அரசு ஊழியர் சங்க தலைவர்கள் தானே, 'எங்க கோரிக்கையை நிறைவேற்றாத முதல்வர்ஸ்டாலினுக்கு, 2026ல் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பரிசா வழங்குவோம்'னு சபதம்எடுத்திருக்காங்க... அதை எல்லாம்இவர் படிக்கலையோ என்ற, 'டவுட்'தான் வருது!

