தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன்:வரும் 2026 சட்டசபை தேர்தலில்,அ.தி.மு.க., ஆளுங்கட்சியாகவும்,எங்கள் கூட்டணியில் உள்ள ஒரு கட்சி எதிர்க்கட்சியாகவும் வரும். அனைத்து தரப்பினரும்,அ.தி.மு.க., ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். எங்களுடன் கூட்டணியில் வரும் கட்சி தான்,பிரதான எதிர்க்கட்சியாக வரும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது.

டவுட் தனபாலு: கடந்த 2011 சட்டசபை தேர்தலில், நீங்க ஆளுங்கட்சியாகவும், தே.மு.தி.க.,எதிர்க்கட்சியாகவும் வந்த கதை, 'ரிப்பீட்டு' ஆகும்னு நினைக்குறீங்களோ... ஆனா, 2011ல் இருந்த ஜெ.,யும், விஜயகாந்தும்இப்ப இல்லை என்ற உண்மையைஉணர தவறிட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புகுழு தலைவர் எச்.ராஜா: புதுடில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அதனால், பல தீங்குகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம், டில்லியில் நடக்கும் ஆம் ஆத்மி அரசின் மோசமான செயல்பாடு தான்.

டவுட் தனபாலு: டில்லியில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு எதிராக கவர்னரை வச்சு பல முட்டுக்கட்டைகளை போடும் மத்திய அரசு, காற்று மாசு விவகாரத்திலும்,மாநில அரசை மீறி நடவடிக்கை எடுக்கலாமே... ஆனா, 'ஆம் ஆத்மி அரசுக்கு கெட்ட பெயர் கிடைக்கட்டும்' என கருதி, மத்திய அரசு மவுனமா இருக்குதோ என்ற, 'டவுட்'தான் வருது!



வி.சி., கட்சி தலைவர்திருமாவளவன்: அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு நிறுவனங்களை, தன் அரசியல்நடவடிக்கைகளுக்காக, பா.ஜ., அரசு வெளிப்படையாக பயன்படுத்துகிறது. தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் என பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, மறைமுக நெருக்கடி கொடுப்பதை பா.ஜ., அரசு நிறுத்த வேண்டும்.

டவுட் தனபாலு: உங்க கட்சியின்ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை, 'ரெய்டு' நடத்தியதற்கு, உங்க கூட்டணி பார்ட்னரான தி.மு.க., தலைமை எந்த கண்டனமும்தெரிவிக்கலையே... 'கூட்டணி ஆட்சி என குரல் கொடுத்த ஆதவ் அர்ஜுனாவுக்கு இதுவும்வேணும்; இன்னமும் வேணும்'னுவேடிக்கை பார்க்குதோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us