
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி: தி.மு.க.,வில் வாரிசு அரசியல் நடக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன் சொந்தங்கள் அனைவரையும் எம்.எல்.ஏ.,- எம்.பி., ஆக்கினார். தற்போது அவரது மகன் ஸ்டாலினும், வாரிசான உதயநிதியை அமைச்சராக்கியுள்ளார். தன் உடல்நிலையை காரணம் காட்டி, உதயநிதியை துணை முதல்வராகவும்
ஆக்கலாம்.
டவுட் தனபாலு: அதான், 'வதந்தி'ன்னு சொல்லிட்டாரே! வதந்தியா, உண்மை யான்னு, இன்னும் கொஞ்ச நாள்ல, 'டவுட்' இல்லாம, மீண்டும் உறுதி படுத்துவார்னு நம்புவோம்!
தமிழக காங்., தலைவர் அழகிரி: தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்தோம். பொது மக்களுடனும், தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் கலந்துரையாடல் கூட்டம் நடத்தும் தேதியை பின்னர் அறிவிப்போம். ஏற்கனவே லோக்சபா தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம். இதுவரை, 20 லோக்சபா தொகுதிகளில், பூத் கமிட்டி பயிற்சி பாசறை மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளன.
டவுட் தனபாலு: தமிழக காங்., ரொம்பவே, 'ஆக்டிவ்'வா இருக்கிற மாதிரி காட்டிக்கிறீங்களோ... இப்படி, 'பில்டப்' கொடுத்தால் தான், ஆளுங்கட்சி தரப்பு, ஒன்றிரண்டு சீட்களை கூடுதலா போட்டு தரும்னு கணக்கு போடுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பா.ம.க., தலைவர் அன்பு மணி: தமிழகம் முழுதும், 2023 ஜனவரி முதல் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, ஓராண்டாகியும் இன்னும் வழங்கப்படவில்லை; இது கண்டனத்திற்குரியது. மகளிர் உரிமைத் தொகைக்கு அதிகமானோர் விண்ணப்பிப்பதை தவிர்க்கவே, புதிய ரேஷன் கார்டுகள் வினியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாக கூறப்படுகிறது. அதுதான் உண்மை என்றால், தமிழக அரசின் அணுகுமுறை தவறானது.
டவுட் தனபாலு: மகளிர் உரிமைத்தொகை மட்டுமா...? மழை, வெள்ளம் வந்தா, 6,000 ரூபாய், பொங்கல் பரிசு, 1,000 ரூபாய்னு எல்லாமே ரேஷன் கார்டுகளை மையமா வச்சு தானே குடுக்கிறாங்க... அதனாலயே, புது கார்டுகள்
தமிழக முதல்வர் ஸ்டாலின்: சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி, 'மகளிர் உரிமைத் தொகையில் 1,000 ரூபாய் வந்து விட்டது. பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் வந்து விட்டது.
அரிசி, சர்க்கரை, கரும்பு வந்து விட்டது. வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் கிடைத்தது. ஒரு மாதத்தில், முதல்வர் 8,000 ரூபாய் கொடுத்து விட்டார். பொங்கலுக்கு நான் யாரையும் எதிர்பார்க்கத் தேவையில்லை' என கூறியுள்ளார். அவர் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சி தான், எனக்கான உற்சாக மருந்து.
டவுட் தனபாலு: முதல்வர் வீட்டுல இருந்தே எடுத்து கொடுத்துட்டதா, அந்த சகோதரி தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல... அது போகட்டும்... 'மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடு'ன்னு சொல்ற மாதிரி, அந்த சகோதரிக்கு ஒரு நிரந்தர வேலைக்கு அரசு ஏற்பாடு செய்தால், அவங்க இப்படி அரசிடம் கையேந்த வேண்டாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: 'மூத்த குடிமக்கள் ரயிலில் பயணிக்க, 50 சதவீதம் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதன் வாயிலாக, 2022 - 23ம் ஆண்டில், 15 கோடி மூத்த குடிமக்களிடம் இருந்து ரயில்வே நிர்வாகம் 2,242 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
டவுட் தனபாலு: பெரும்பாலும் மூத்த குடிமக்கள், பென்ஷன் அல்லது குறைந்த வருவாயில் தான், காலத்தை கடத்துவாங்க... பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை லோக்சபா தேர்தல் பரிசா, மீண்டும் தந்தால், மத்திய அரசை மனமுவந்து பாராட்டுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
ராஜ்யசபா காங்., - எம்.பி., பிரமோத் திவாரி: பகுஜன் சமாஜ் கட்சி உண்மையிலேயே பா.ஜ., எதிர்ப்பு மனநிலையில் இருக்குமானால், அவர்கள் உடனடியாக, 'இண்டியா' கூட்டணியில் இணைய வேண்டும். பா.ஜ.,வை எதிர்க்க மாயாவதிக்கு தைரியம் இல்லை என்றால் விட்டுவிடலாம்.
டவுட் தனபாலு: பா.ஜ.,வை எதிர்ப்பவங்க, உங்க கூட்டணியில இணையணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன...? 'புலிக்கு பயந்தவங்க என் மேல வந்து படுங்க' என்று சொல்வது போல தான் இருக்கு இவரது அழைப்பும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

