sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : செப் 22, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 22, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக வெற்றிக் கழகத்தின்தலைவர் நடிகர் விஜய்: மக்களின்பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில்,தமிழக அரசியல் களத்தில், புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய, நம் கட்சியின் தலைவர்கள், கொள்கைகள், கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை பிரகடனப்படுத்தும் முதல் மாநில மாநாடு, அக்டோபர் 27ல் மாலை 4:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடக்க உள்ளது.

டவுட் தனபாலு: தமிழகத்தில்அக்டோபர், நவம்பர் வடகிழக்கு பருவமழை சீசன்... வங்கக்கடலில்,வரிசைகட்டி புயல் சின்னங்கள் உருவாகும்... அதுவும் இல்லாம,அக்., 31ல் தீபாவளி வேற வருது...அதுக்கான முன்தயாரிப்புகள்ல மக்கள் பரபரப்பா இருப்பாங்க... அந்த நேரத்தில் மாநாடுநடத்துறீங்களே... உங்களுக்குசரியான அரசியல் ஆலோசகர்கள் அமையலையோ என்ற, 'டவுட்' தான் வருது!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: வேலுார் மாநகராட்சியை பொறுத்தவரை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அனைத்து சாலைகளையும் கொத்தி போட்டுள்ளனர். இந்த பணியைஎடுத்தவர்கள், பெரிய பெரியகான்ட்ராக்டர்கள் ஒரு அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வும் கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். ஆனால், இன்று வரை பணிகள் நடக்கவில்லை. நான் கேட்டால், அவர் கும்பிடு போட்டு சென்று விடுகிறார்.

டவுட் தனபாலு: நீங்க அவரிடம்,'எதையோ' கேட்டு, அதை அவர் கண்டுக்காம கும்பிடு மட்டும்

போட்டுட்டு போயிட்டார்னு தெளிவா தெரியுது... அந்த கோபத்துலதான், கான்ட்ராக்டர்களை, 'கோர்த்து' விடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: அப்பா கருணாநிதி என்ற அடிப்படையில் மகன் ஸ்டாலின்முதல்வராகி உள்ளார். அதுபோல் நேற்று வரை சினிமாவில்நடித்த உதயநிதி, தற்போது அமைச்சராக உள்ளார். 'நான் பதவிக்கு வர மாட்டேன்' எனக் கூறிய உதயநிதி, தற்போதுசட்டசபைக்குள் வந்தாலே சீனியர்அமைச்சர் உட்பட எல்லாரும் எழுந்து நிற்கின்றனர்.

டவுட் தனபாலு: உங்க கட்சியிலும் கூட, 1990கள்ல திடீர்னு ஒரு வளர்ப்பு மகனை ஜெ., தத்தெடுத்து, அவருக்கு ஆடம்பரமா கல்யாணமும் நடத்தி வச்சாங்களே... அப்ப, நீங்க உட்பட அ.தி.மு.க.,நிர்வாகிகள், அவருக்கு சலாம் போடலையா... அவங்கவங்க பதவிகளை காப்பாத்திக்கஅரசியல்ல இதெல்லாம் சகஜம்தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!






      Dinamalar
      Follow us