sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஏப் 19, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: தமிழக காங்., தலைவர் பதவியை எனக்கு கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால், நான் எனது ஸ்டைலில் கட்சியை நடத்துவேன். அது தமிழக காங்., தலைவர்களுக்கு பிடிக்காது. டில்லியில் உள்ள கட்சித் தலைமையும் எனக்கு தருவதற்கு தயாராக இல்லை.

டவுட் தனபாலு: தமிழக காங்., தலைவராகணும்னா, மனசுல நினைச்சதை எல்லாம் பேசிட முடியாது... வாயை திறந்தா, சோனியா, ராகுல் புகழ் பாடிட்டு தான் மற்ற விஷயங்களை பேசவே ஆரம்பிக்கணும்... அதெல்லாம் உங்களுக்கு வராது... அதனால, தமிழக காங்., தலைவர் பதவியும் உங்களுக்கு கிட்டாது என்பதில், 'டவுட்'டே இல்லை!





மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்: சினிமாவில் வன்முறைகளை காட்டுவதை, மாணவர்கள் உள்வாங்கிக் கொள்கின்றனர். சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும். சினிமா மோகத்தில் இன்றைய இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களை திருத்த முடியாது. சிவாஜி கணேசன் எப்பேர்ப்பட்ட நடிகர். அவர் அரசியலில் பெரிதாக வளர முடியவில்லை. நடிப்பை தான் மக்கள் பார்க்கின்றனரே தவிர, அரசியலுக்கு வந்தால் எடுபடாது. சினிமாவும், அரசியலும் எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் எடுபட்டது.

டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... சினிமாவால் கிடைத்த புகழ் வெளிச்சத்தை அரசியலுக்குப் பயன்படுத்தி, ஜெயித்தவங்க நம்ம நாட்டுல எம்.ஜி.ஆரும், ஆந்திராவுல என்.டி.ராமாராவும் மட்டும்தான்... மற்ற எந்த நடிகர்கள் துவங்கிய கட்சியும் பெருசா எடுபடலை... இதை நம்ம ஊர் நடிகர்கள் உணராம இருப்பது ஏன் என்ற, 'டவுட்'தான் வருது!



அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: அரசியலில், அவசரப்பட்டு உணர்ச்சி வசப்பட்டு பேசுகின்றனர். பின், அதை திரும்பப் பெறுவது போல, ஏற்கனவே இருந்த கூட்டணிக்கே வருகின்றனர். மக்களுக்காகவும், கட்சி நலனுக்காகவும் இப்படி முடிவெடுப்பது கட்டாயமாகி உள்ளது. பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்திருப்பதும் இப்படித்தான். அ.தி.மு.க.,வை அழித்து விடாமல் காக்கவே, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பழனிசாமி திரும்பி உள்ளார்.

டவுட் தனபாலு: நீங்க, ஏற்கனவே தே.ஜ., கூட்டணியில் இருக்கீங்க... அதற்குள் பழனிசாமி, 'என்ட்ரி' ஆகியிருக்கார்... 'அவர் வராம போயிருந்தால், அ.தி.மு.க.,வை பா.ஜ.,வே அழிச்சிருக்கும்'னு, 'சேம் சைடு கோல்' போடுறீங்களே... உங்களை தே.ஜ., கூட்டணியில் நீடிக்க விடுவாங்களா என்பது, 'டவுட்'தான்!








      Dinamalar
      Follow us