sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : ஜூன் 16, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 16, 2025 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: பனை மரத்தில் இருந்து கிடைக்கும் கள் குடித்து, யாரும் இறந்ததில்லை; அரசின், 'டாஸ்மாக்' கடைகள் இருந்தும், கள்ளச்சாராய சாவுகள் தொடர்கின்றன. பானையில் சுண்ணாம்பு தடவி வைத்தால் பதநீர்; சுண்ணாம்பு தடவாமல் இறக்கினால் கள். அதை குடித்து இறந்தவர்களால், விதவைகள் உருவாகவில்லை. ஆனால், டாஸ்மாக் மது குடித்து இறந்தவர்களால் தான், விதவைகள் உருவாகி உள்ளனர்.

டவுட் தனபாலு: கள் விற்பனையை அனுமதித்தால், 'டாஸ்மாக்' வியாபாரம் படுத்து, ஆளுங்கட்சியில் உள்ள மதுபான ஆலை முதலாளிகள் வருமானம், அதல பாதாளத்துக்கு போயிடுமே... அதனால, நீங்க என்ன தான் தலைகீழா போராடினாலும், தமிழகத்தில் கள்ளுக்கு அனுமதி தருவது, 'டவுட்' தான்!

பத்திரிகை செய்தி: தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரியத்தின் புதிய தலைவராக, கோவை மாவட்டம், திப்பம்பட்டி, வெ.ஆறுச்சாமி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே, வாரியத்தின் துணை தலைவராக உள்ள கனிமொழியின் பெரியப்பா. ஒரே மாவட்டம், ஒரே தாலுகாவில் வசிக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு, தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது, தி.மு.க.,விலும், துாய்மை பணியாளர்கள் மத்தியிலும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டவுட் தனபாலு: அது சரி... ஒரே குடும்பத்தில் தந்தை முதல்வராகவும், மகன் துணை முதல்வராகவும் இருக்கிறதை மட்டும் ஏத்துக்கிறவங்க, இந்த நியமனங்களை மட்டும் ஏத்துக்க மறுப்பது ஏன் என்ற, 'டவுட்' வருதே!

தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: மத்தியில், பா.ஜ., அரசு பொறுப்பேற்று, 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பா.ஜ., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், பொது சிவில் சட்டத்தை தவிர அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொது சிவில் சட்டமும் விரைவில் நிறைவேறும். தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த, 512 வாக்குறுதிகளில், 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.



டவுட் தனபாலு: 'அயோத்தியில் ராமர் கோவில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் தடை சட்டம்' என, கடந்த, 11 ஆண்டு பா.ஜ., ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகள் எல்லாம், 1998ல் வாஜ்பாய் பிரதமர் ஆனப்பவே தந்தது... அவற்றை, 2014ல் மோடி, பிரதமரான பிறகு தானே ஒவ்வொன்றா நிறைவேற்றியிருக்காரு... அந்த மாதிரி, தி.மு.க.,வினரும், அடுத்து, 10 - 15 வருஷங்கள் கழித்து ஆட்சிக்கு வந்தால், பழைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!






      Dinamalar
      Follow us