தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 22, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக போக்குவரத்து து றை அமைச்சர் சிவசங்கர்: தமிழகத்தின் பிரமாண்ட கட்சி ஒன்று, தங்களுடன் கூட்டணி சேர வருவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொல்கிறார். அப்படியென்றால், அ.தி.மு.க.,வை விட பெரிய கட்சி என்று எதை சொல்கிறார் என, தெரியவில்லை. இப்படி, அ.தி.மு.க.,வையே கேவலப்படுத்தும் ஒரு தலைவர் தான், அக்கட்சிக்கு பொதுச் செயலராக இருக்கிறார்.

டவுட் தனபாலு: தமிழகத்தில் உறுப்பினர் எண்ணிக்கையிலும், ஓட்டு வங்கியிலும் அ.தி.மு.க., முதலிடத்திலும், தி.மு.க., இரண்டாம் இடத்திலும் இருப்பது உலகறிந்த உண்மை... இந்த ரெண்டு கட்சிகளை விட பிரமாண்டமான கட்சி என்றால், நடிகர் விஜய் துவங்கியுள்ள, தமிழக வெற்றிக் கழகத்தை தான் பழனிசாமி சொல்றாரா என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?



தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சர்ச்சை எதுவும் இல்லை. தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே புள்ளியில், தேசிய ஜனநாயக கூட்டணியாக இணைந்துள்ளோம். தி.மு.க.,வை அகற்ற வேண்டும் என்பதே நோக்கம். 2026 சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என்பதை அறிவித்து விட்டோம்; இதில், எந்த குழப்பமும் இல்லை.

டவுட் தனபாலு: முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை... ஆனா, அவருக்கு பக்கத்துலயே துணை முதல்வர் மற்றும் சில அமைச்சர் நாற்காலி களும் உங்க கட்சிக்கு வேணும்னு நீங்க, 'துண்டு' போடுவது தான், எல்லா குழப்பத்துக்கும் துாண்டுகோலா இருக்கு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!



இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் முத்தரசன்: கடந்த, 2019 லோக்சபா தேர்தல் செலவுக்காக, தி.மு.க., அதனுடைய வங்கி கணக்கில் இருந்து, இந்திய கம்யூ. , கட்சியின் வங்கி கணக்குக்கு, 15 கோடி ரூபாய் அனுப்பியது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத் துக்கு, தி.மு.க.,வும், எங்களுடைய கட்சியும் கணக்கு கொடுத்து உள்ளது. இந்த விஷயத்தில் அ.தி.மு.க., விஷம பிரசாரத்தை தொடர்ந்தால், அ.தி.மு.க.,வின் பண அரசியல் குறித்து, நாங்களும் விமர்சிப்போம்.

டவுட் தனபாலு: கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், இரண்டு தொகுதியில் தான் நீங்க போட்டியிட்டீங்க... அப்ப இருந்த தேர்தல் கமிஷன் விதிப்படி, ஒரு லோக்சபா தொகுதிக்கு, 70 லட்சம் ரூபாய் தான் செலவு செய்யணும்... அப்படி பார்த்தா, 1.40 கோடி தான் தேவைப்படும்... ஆனா, தொகுதிக்கு, 7.50 கோடி வீதம், 15 கோடி ரூபாயை செலவழித்த நீங்க எப்படி ஏழை பங்காளனா இருக்க முடியும் என்ற, 'டவுட்' வருதே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us