sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : ஜூலை 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 26, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்: நீங்கள் என்னை அடித்தால், நான் உடனே மராத்தியில் பேச முடியுமா? அத்தகைய வெறுப்பு பரவினால், மஹாராஷ்டிராவிற்கு முதலீடுகள் வராது. வெறுப்புணர்வை தவிருங்கள். எனக்கு ஹிந்தி தெரியாதது, பெரிய தடையாக உள்ளது. பல மொழிகளை கற்பதுடன், தாய்மொழியால் பெருமைப்பட வேண்டும்.

டவுட் தனபாலு: தாய்மொழி மீது பற்று இருக்கலாம்... ஆனா, அது வெறியாகி விடக் கூடாது... தமிழக ஆளுங்கட்சியினர் தான், 'மும்மொழி கொள்கை எல்லாம் வேண்டாம்... இருமொழி கொள்கையே போதும்'னு வறட்டு பிடிவாதம் பிடிக்கிறாங்க... பல மொழிகள் கற்காத வரைக்கும், நாம கிணற்று தவளையாகவே தான் இருக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: கடந்த, 2001ல் இருந்து, ஓரிரு பொது தேர்தல்கள் தவிர, தி.மு.க.,வுடன் தான் வி.சி., கட்சி பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது. தி.மு.க.,வால் வளர்ச்சி அடைந்திருக்கிறதே தவிர, வீழ்ச்சி அடையவில்லை. ஆனால், 'வி.சி., கட்சியை, தி.மு.க., விழுங்கி விடும்' என, பழனிசாமி திரித்து பேசுவது ஏன் என்று தெரியவில்லை!

டவுட் தனபாலு: அடடா... கம்பெனி ரகசியத்தை வெளியில சொல்லிட்டீங்களே... நாளைக்கு தொகுதி பங்கீடு பேச்சு நடக்கிறப்ப, 'எங்களால் தானே உங்க கட்சிக்கு அங்கீகாரம் எல்லாம் கிடைச்சிருக்கு... அதனால, குடுக்கிறதை வாங்கிக்குங்க'ன்னு, தி.மு.க., தரப்பு கொக்கி போட்டா உங்க நிலைமை என்னாகும்னு, 'டவுட்' வருதே!



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: உதயநிதி எத்தனை போராட்டங்களில் பங்கேற்றார்? 'உதயநிதியின் மகன் இன்பநிதி வந்தாலும் ஏற்பேன்' என்கிறார் அமைச்சர் நேரு. தி.மு.க.,வினர் எவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டனர் என பாருங்கள். 1989ல், நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோதே, அமைச்சராக இருந்தவர் நேரு. அங்கு அவருக்கே இது தான் நிலைமை. உழைத்தவர்களுக்கு, தி.மு.க.,வில் பதவி கிடைக்காது.

டவுட் தனபாலு: அட, நீங்க வேற... 1971ல் இருந்து எட்டு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட, கருணாநிதி காலத்து மூத்த தலைவரான துரைமுருகனே, 'இன்பநிதி அரசிலும் பணியாற்றுவேன்'னு, 'துண்டு' போட்டுட்டு இருக்கிறப்ப, 1989ல் அமைச்சரான நேரு எல்லாம் எம்மாத்திரம் என்பதில், 'டவுட்டே இல்லை!








      Dinamalar
      Follow us