sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஆக 16, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 16, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க.,வில் இணைந்துள்ள மைத்ரேயன்: அ.தி.மு.க.,வில் பல குழப்பங்கள் இருக்கின்றன. அங்கு எனக்கு அமைப்பு செயலர் பதவி தந்தனர்; ஆனால், என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான், அங்கிருந்து வெளியே வந்தேன். பிரசார பயணத்துக்காக அழைத்து வரப்படும் கூட்டத்தை பார்த்து, எம்.ஜி.ஆர்., - ஜெ., போல, தன்னையும் ஒரு பெரிய தலைவர் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நினைத்து கொண்டிருக்கிறார்; உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்து ஆகாது.

டவுட் தனபாலு: 'ஊர்க்குருவி பருந்தாக முடியாது' என்பது உங்களுக்கும் பொருந்துமே... அதனால தானே, ஏழாவது முறையா கட்சி மாறியிருக்கீங்க... இங்கயும் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காம போனா, எட்டாவது முறையாகவும் கட்சி மாற தயங்க மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!



பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு: பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க., தலைமை நிர்வாகிகள், மூன்று எம்.எல்.ஏ.,க்கள், 108 மாவட்ட செயலர்களில், 102 பேர், 3,800 பொதுக்குழு உறுப்பினர்களில், 3,640 பேர் என, ஒட்டுமொத்த நிர்வாகிகள் அன்புமணியோடு இருக்கின்றனர்; இதில், ராமதாஸ் உரிமை கோர எதுவும் இல்லை.

டவுட் தனபாலு: கட்சி நிர்வாகிகள், உங்க பின்னாடி இருக்கலாம்... ஆனா, கால்தேய கட்சியை வளர்த்த ராமதாஸ் பின்னாடி தான், தொண்டர்கள் பட்டாளம் நிற்கிறதா அவங்க சொல்றாங்களே... தேர்தலின் போது, நிர்வாகிகள் சீட் தான் கேட்பாங்க... தொண்டர்கள் தான் வேலை செய்வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!



பத்திரிகை செய்தி: கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29ல் வெற்றி பெற்றது. அந்த, 41 இடங்களிலும் தற்போது தே.மு.தி.க.,வின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளவே, 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' சுற்றுப்பயணத்தை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா மேற்கொண்டுள்ளார். அந்த, 41 தொகுதிகளிலும், தே.மு.தி.க.,வுக்கு செல்வாக்கு சரியவில்லை என்று காட்டி, தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,விடம் அதிக, 'சீட்'கள் பெற திட்டமிட்டுள்ளார்.

டவுட் தனபாலு: விட்டா, 'அந்த, 41 தொகுதிகளையும் சிந்தாம, சிதறாம மறுபடியும் தே.மு.தி.க.,வுக்கு தந்துடுங்க'ன்னு கூட கேட்பார் போலிருக்கே... 2011க்கு அப்புறம் தமிழகத்துல சீமான், நடிகர் விஜய் எல்லாம் கட்சிகள் துவங்கி, விஜயகாந்த் ரசிகர்களின் ஓட்டுகளை பங்கு போட்டுக்கிட்டது பிரேமலதாவுக்கு தெரியாதோ என்ற, 'டவுட்'தான் வருது!








      Dinamalar
      Follow us