PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

தமிழக பா.ஜ.,வில் சமீபத்தில் இணைந்த நடிகை கஸ்துாரி: தமிழகத்தில், தெருக்களில் இருக்கும் ஜாதி பெயரை அழித்து விட்டால் ஜாதியை ஒழித்துவிட முடியுமா? சாலைகளில் உள்ள ஜாதி பெயர்களை, தார் வைத்து அழித்து, 60 ஆண்டுகள் ஆகிவிட்டன; ஜாதி ஒழிந்து விட்டதா? தேர்தலில் ஜாதி பார்க்காமல், தி.மு.க.,வால் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? ஆணவ கொலைகள் நடக்கும்போது, உங்களின் ஜாதி ஒழிப்பு ஆர்வம் எங்கே போனது?
டவுட் தனபாலு: இன்றைய முதல்வரின் தந்தை கருணாநிதி, 1997ல் மாவட்டங்கள், போக்குவரத்து கழகங்களுக்கு இருந்த ஜாதி தலைவர்கள் பெயர்களை நீக்கி, அதிரடியாக உத்தரவு போட்டாரு... 28 வருஷங் களாகியும், எங்கயும் ஜாதி பாகுபாடு ஒழிஞ்ச மாதிரி தெரியலை... அதனால, இன்றைய முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக் கும் பலன் இருக்குமா என்பது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: வரும் சட்டசபை தேர்தலுக்கு நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில், தீபாவளியையொட்டி தி.மு.க.,வில் வார்டு செயலர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை, தலா, 10,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதனால், அக்கட்சி நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
டவுட் தனபாலு: இந்த பணத்தை, தி.மு.க., தலைமை, கட்சி நிதியில் இருந்து கண்டிப்பா கொடுக்காது... அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் தான் தருவாங்க... அவங்களும் தங்களது வீட்டு பணத்தையா தருவாங்க... 'அள்ளி அள்ளி' சம்பாதித்ததில், கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு கிள்ளி கொடுக்குறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: எங்கள் கட்சி எம்.பி., ராகுல், இளகிய மனம் கொண்டவர். எங்கே துயரம் நடந்தாலும் அவர்களை அழைத்து பேசுவார். பா.ஜ., ஆளும் மாநில தலைவர்களிடமும் கூட ராகுல் பேசுவார். அந்த வகையில் தான், கரூர் துயர சம்பவம் நடந்ததும், த.வெ.க., தலைவர் விஜயிடம் பேசி உள்ளார்; இதில் அரசியல் இல்லை.
டவுட் தனபாலு: அப்படியா...? உங்களை பல வருஷங்களா தோளில் துாக்கி சுமக்கும் தி.மு.க.,வினர், கரூர் சம்பவத்தில், விஜய் கட்சியை கடுமையா விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்க... அவங்க முகத்துல அடிக்கிற மாதிரி, விஜயிடம் ராகுல் பே சியது, அதுவும் வெளிநாட்டி ல் இருந்தபடி பேசியதில் அரசியல் இல்லன்னு சொன்னா, 5 வயது குழந்தை கூட நம்புமா என்பது, 'டவுட்'தான்!