sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முக்குலத்தோர் புலிப்படை தலை வரும், நடிகருமான கருணாஸ்: தமிழகத்தில் நல்லாட்சி வழங்கி வரும் ஸ்டாலின் ஆட்சி தொடர, வரும் சட்டசபை தேர்தலில் பணியாற்றுவேன். என் கடந்த கால செயல்பாடுகளை உற்று நோக்கும் முதல்வர், நிச்சயமாக வரும் சட்டசபை தேர்தலில், அங்கீகாரத்தை வழங்குவார் என நம்புகிறேன். இன்று, அ.தி.மு.க., கூட்டத்தில், அவர்கள் கட்சி கொடியை பிடிக்காமல், வேறு கட்சி கொடியை பிடிக்கும் அவல நிலையை பார்க்கிறோம். இதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் காரணம். தன் சுயநலத்திற்காக, அ.தி.மு.க.,வை அடகு வைக்க துணிந்தவர் அவர்.



டவுட் தனபாலு: கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், ஜெ., புண்ணியத்தில் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்து, எம்.எல்.ஏ., ஆனீங்க... இப்ப, ஸ்டாலின் தயவில் மீண் டும், எம்.எல்.ஏ.,வாக துடிக்கிறீங்க. .. இப்படி, தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி, கட்சியை அடகு வைக்கும் நீங்க, அ.தி.மு.க.,வை குறை சொல்லலாமா என்ற, 'டவுட்' வருதே!

புதிய நீதிக் கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம்: கடந்த, 25 ஆண்டுகளாக, பா.ஜ., தலைமை யிலான, தேசிய ஜனநாயக கூட்டணி யில் புதிய நீதிக் கட்சி இருக்கிறது. 2026 சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., கூட்டணியில் தொடர்வோம். நடிகர் விஜயின், த.வெ.க.,வும் இந்த கூட்டணிக்கு வர வேண்டும். அப்படி வந்தால், பலமான கூட்டணியாக இருக்கும்; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பா.ஜ., கூட்டணிக்கு விஜயை வரவேற்கிறோம்.

டவுட் தனபாலு: நீங்க, விஜயை இரு கரம் நீட்டி வரவேற்கிறீங்க... ஒரு வேளை அவர், உங்க கூட்டணிக்கு வந்தா, அவருக்கு நிறைய, 'சீட்'கள் தரணும்... அப்ப, உங்களை மாதிரி சின்ன கட்சிகளுக்கு தர்ற, ஒன்றிரண்டு சீட்களை எடுத்து தான், விஜய் கட்சிக்கு கொடுப்பாங்க... அதனால , பாதிப்பு உங்களுக்கு தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ம.க., தலைவர் அன்புமணி: கேரளாவில், 64,006 குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு, இருப் பிடம், வாழ்வாதாரம், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள் ளன. வறுமைக்கான காரணங்களை கண்டறிய, கேரளாவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பே இதற்கு காரணம். தமிழகத்திலும் வறுமை தலைவிரித்தாடுகிறது. ஆனால், தமிழகத்தில் வறுமையில் வாடும் குடும்பங்கள் குறித்த ஆதாரங்கள் இல்லை.



டவுட் தனபாலு: தமிழகத்தில் வறுமை தலைவிரித்தாடுதா... தீபாவளிக்கு, 789 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கி, மூக்குமுட்ட குடிச்சிருக்காங்க... இப்படிப்பட்டவங்க இருக்கிற தமிழகம், வறுமையில் வாடுதுன்னு சொன்னா, யாராவது நம்புவாங்களா என்பது, 'டவுட்' தான்!






      Dinamalar
      Follow us