sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : டிச 14, 2025 03:19 AM

Google News

PUBLISHED ON : டிச 14, 2025 03:19 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னாள் எம்.பி.,யும், அகில இந்திய காங்., செயலருமான விஸ்வநாதன்: நடிகர் விஜய் தலைமையிலான, த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து, டில்லி மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும். எங்கள் மேலிடம் யாருடன் பேசுகிறது; எதற்கு பேசுகிறது என்பதை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது. தி.மு.க.,விடம் காங்கிரஸ் கூடுதல், 'சீட்'கள் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது; காங்கிரசில் பெரும்பாலானோருக்கு, அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசையில் என்ன தவறு இருக்கிறது?

டவுட் தனபாலு: தி.மு.க.,விடம் கூடுதல் சீட்களும், ஆட்சியில் பங்கும் கேட்டு கேட்டு அலுத்து போயிடுச்சு... அதனால, 'கூடுதல் சீட்களும், ஆட்சியில் பங்கும் தர மறுத்தால், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் தயங்க மாட்டோம்'னு, மிரட்டி பார்க்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

பத்திரிகை செய்தி: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது; இதில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்று, அவரது தலைமையை விரும்பி வருவோரை, கூட்டணிக்கு அரவணைப்போம்' என, கூறப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: எல்லா கட்சிகளின் மாவட்ட செயலர்கள் கூட்டமும், அந்தந்த கட்சி தலைவர்கள் தலைமையில் தான் நடக்கும்... முதல்வராக இருக்கும் ஸ்டாலினே, ஏகப்பட்ட அரசு பணிகளுக்கு மத்தியிலும், மாவட்ட செயலர்கள் கூட்டத்துக்கு தவறாம ஆஜராகிடுறாரு... மாவட்ட செயலர்கள் கூட்டத்துக்கே வர முடியாத அளவுக்கு, விஜய் அப்படி என்னதான் பண்ணிட்டு இருக்கார் என்ற, 'டவுட்' வருதே!



விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாவலன்: எங்கள் கூட்டணியில், தி.மு.க.,வுக்கு அடுத்து வி.சி., தான் பெரிய கட்சி. எனவே, வரும் தேர்தலில், இரட்டை இலக்கத்தில், வி.சி., கட்சி போட்டியிடும். தி.மு.க.,விடம், 20 தொகுதிகளையாவது கேட்டு பெறுவோம்.

டவுட் தனபாலு: அது சரி... 'தமிழகம் முழுக்க தொண்டர்கள் இருக்கிற, காங்., தான், தி.மு.க.,வுக்கு அடுத்த பெரிய கட்சி'ன்னு காங்கிரசார் சொல்றாங்க... ஆனா, 'நாங்கதான் பெரிய கட்சி'ன்னு நீங்க சொல்றீங்க... உங்க கட்சிக்கு, தமிழகம் முழுக்க கிளைகளும், தொண்டர்களும் இருக்காங்களா என்ற, 'டவுட்' வருதே!






      Dinamalar
      Follow us