தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 02, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2026 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்: திண்டிவனத்தில், 35 ஆண்டுகளாக செயல்பட்ட பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதற்கு, மீண்டும் இந்திரா பெயரை வைக்காமல், கருணாநிதி பெயர் வைக்கப்பட்டுள்ளது. செஞ்சியில் புதிய பஸ் நிலையத்திற்கு, கருணாநிதியின் தாய் அஞ்சுகம் பெயரை வைத்துள்ளனர். இதை தட்டிக்கேட்க, காங்., கட்சியினருக்கு துப்பில்லை. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, உண்மையான காங்கிரஸ்காரராக இருந்தால், அந்த உணர்வு இருந்திருக்கும்.

டவுட் தனபாலு: அது சரி... செல்வப்பெருந்தகை பல கட்சிகள் தாவி, கடைசியாக காங்கிரசில் மையம் கொண்டிருக்கார். மேலும், அவரின் பேச்சுக்களைக் கேட்டால், அவர், தி.மு.க.,வின் உடன்பிறப்பு என்பது போல், 'டவுட்'டே இல்லாமல் இருக் குமே... அவருக்கு, காங்கிரசாவது, ஒண்ணாவது!

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஏ.என்.எஸ்.பிரசாத்: அனைத்து கட்சிகளுக்கும் அறிவுரை சொல்லும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காங்கிரசோடு கைகோர்க்குமாறு, நடிகர் விஜய்க்கு, தன் கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா வாயிலாக தொடர்ந்து அறிவுரை சொல்வது ஏன்... ஒருபுறம் தி.மு.க., - காங்., கூட்டணி; மறுபுறம் காங்., - த.வெ.க., கூட்டணி என, 'சீட்' பேரத்திற்காக, திருமாவளவனாக இருந்தவர், இருநா வளவனாக, நடிகர் கமலையும் மிஞ்சும் விதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

டவுட் தனபாலு: இவர் சொல்றது உண்மையா, இல்லையான்னு ஆளுங்கட்சி தரப்பு, உளவுத்துறையை விட்டு விசாரிச்சு உண்மையை தெரிஞ்சிக்கும்... அதே நேரம், திருமாவளவன் அரசியல்ல இப்படி ஒரு உள்நோக்கமும் இருக்குமோ என்ற, 'டவுட்'டை தி.மு.க.,வினர் மனதில் இவர் விதைச்சிட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!



இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன்: சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். எதிர்க்கட்சியினர் சித்தரிப்பது போல, சென்னை கொலை நகரம் அல்ல; நல்லிணக்க கலை நகரம். மதக்கலவரங்கள் நடைபெறாத பூமி சென்னை.

டவுட் தனபாலு: சென்னைக்கு வந்திருந்த பீஹார் தம்பதியின், 2 வயது ஆண் குழந்தையை, மது போதையில் கொடூரமாக சிலர் கொலை செய்த சம்பவம் எல்லாம், இவர் கவனத்துக்கு வரலையா... ஒரு வேளை, அதை எ ல்லாம் கண்டிச்சு கருத்து சொன்னா, 'சீட்'களை குறைச்சிடு வாங்கன்னு பயந்து, ஆளுங்கட்சிக்கு இப்படி முட்டு கொடுக்கிறாரா என்ற, 'டவுட்' தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us