தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 12, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2026 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்: நிர்வாகத்தில் பலவிதங்கள் உள்ளன. செயல்படுபவர் தான் அமைச்சராக இருக்க வேண்டும். ஏன் என்றால், என் துறையில், 108 ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். அவர்களை மேய்ப்பதே பெரிய சிக்கலாக உள்ளது. பதவி உயர்வு கொடுத்து சிலரை, டி.எப்.ஓ.,வாக ஆக்கி, ஒரு மாதிரி ஓட்டிட்டு இருக்கேன்.

டவுட் தனபாலு: 'மேய்க்கிறேன்; ஓட்டிட்டு இருக்கேன்'னு ஆடு, மாடுகள் மாதிரி அதிகாரிகளை நினைக்கிறீங்களா... 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உங்களுக்கு போக்குவரத்து துறை தந்தாங்க... அங்க சரியா செயல்படாம, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாத்தினாங்க... அங்கயும் நீங்க திணறவே, வனத்துறைக்கு மாத்தியிருக்காங்க... இங்கயும் நீங்க சொதப்பினா, அடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும், உங்களை அமைச்சரவையில் சேர்ப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!



த .வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா: தங்களுக்காக உழைக்கும் கூட்டணி கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு கொடுக்க தி.மு.க., பயப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள், த.வெ.க., கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கான முழு மரியாதை கிடைக்கும்; ஆட்சியில் பங்கும் கொடுக்கப்படும்.

டவுட் தனபாலு: 'போனா வராது; பொழுது போனா கிடைக்காது'ன்னு மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள் கூவி அழைக்கிற மாதிரி கூட்டணிக்கு கூப்பிடுறீங்களே... முதல்ல, உங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைச்சா தானே, கூட்டணி கட்சிகளுக்கு அதுல பங்கு தர முடியும்... முதல்ல, நீங்க கூரை ஏறி கோழியை பிடியுங்க... அப்புறமா, வானம் ஏறி வைகுண்டம் போகலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தமிழக துணை முதல்வர் உதயநிதி: தி.மு.க.,வுக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள பந்தம், கருணாநிதி - காயிதே மில்லத் காலத்தில் உருவானது. கருணாநிதி வழியில், முஸ்லிம்களை தனது உறவாக முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார். சிறுபான்மையினருக்காக உழைக்க, தி.மு.க.,வும், தி.மு.க., அரசும் காத்து கொண்டிருக்கிறது. எனவே, சிறுபான்மையின மக்கள் எப்போதும் போல தி.மு.க.,வுக்கு துணையாக இருக்க வேண்டும்.

டவுட் தனபாலு: சிறுபான்மை யினருக்கு துணையா நீங்க இருப்பதை யாரும் தடுக்கலை; எதிர்க்கலை... அதே நேரம், பெரும்பான்மையினரும் உங்களுக்கு ஓட்டு போட்டிருக்காங்க... நீங்க ஆட்சியில் அமர, அவங்களும் முக்கிய காரணம் என்பதை மறக்காம, அவங்களது நல்லது, கெட்டதுகள்லயும் கலந்துக்கிட்டா, 'டவுட்' இல்லாம தங்களை பாராட்டலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us