தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 26, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2026 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும், கூட்டணியில் சேர்த்து கொள்கி றார் ஸ்டாலின்; கொள்ளையடித் த பணத்தில் பங்கும் கொடுக்கிறார். அதனால் தான் தி.மு.க., கூட்டணிக்கு, 'கல்லாப்பெட்டி கூட்டணி' என பெயர் வைத்திருக்கிறேன். அந்த கல்லாப்பெட்டி கூட்டணி இனி வெற்றி பெற முடியாது. விசில் புரட்சி செய்யும்; வரும் தேர்தலில், த.வெ.க., தான் வெல்லும்.

டவுட் தனபாலு: நீங்களும் தான், 'ஆட்சியில் பங்கு தர்றேன்... கூட்டணிக்கு வாங்க'ன்னு கூவி அழைக்காத குறையா கூப்பிட்டு பார்த்தீங்க... யாராவது வந்தாங் களா... சீட்கள் மட்டுமில்லாம, ரூபாய் நோட்டுகளையும் யார் வெயிட்டா தர்றாங்களோ, அந்த பக்கம் தான் சின்ன கட்சிகள் வரிசை கட்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி: ஒரு பெண், அதுவும் எம்.பி.,யாக இருக்கும் என்னை, பொதுவெளியில் ஆபாசமாக பேசிய, கரூர் மாவட்ட பா.ஜ., தலைவரை வேண்டுமென்றே கைது செய்யாமல், அவர் முன்ஜாமின் பெற, போலீசார் மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர். பா.ஜ.,வின் கைப்பாவையாக காவல் துறை செயல்படுகிறது. தமிழக மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு, பா.ஜ.,வுக்கு அடிபணிந்து சேவகம் செய்ய, எதற்கு ஒரு காவல் துறை?

டவுட் தனபாலு: 'தமிழகம் எப்பவுமே, டில்லி பா.ஜ.,வுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான்' என, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி சொல்வாரே... ஆனா, 'தமிழக போலீஸ் துறை தான், ஸ்டாலினுக்கு அவுட் ஆப் கன்ட்ரோலா இருக்கு'ன்னு நீங்க சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



ம.தி.மு.க., அவைத் தலைவர் அர்ஜுனராஜ்: தி.மு.க.,விடம் கடந்த தேர்தலை விட, கூடுதலான தொகுதிகளை கேட்டுள்ளோம். மேலும், ஒரு ராஜ்யசபா, 'சீட்'டும் கேட்டுள்ளோம். தொகுதிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என, தி.மு.க., சொல்லவில்லை. தனி சின்னத்தில் போட்டியிட, ம.தி.மு.க., முடிவு செய்துள்ளது.

டவுட் தனபாலு: ஏற்கனவே, தி.மு.க., கூட்டணிக்கு வந்திருக்கும் தே.மு.தி.க.,வும் ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டிருக்கு... இப்ப, நீங்களும் கேட்கிறீங்க... தேர்தலில் போட்டியிடாமலும், பத்து பைசா செலவில்லாமலும், எல்லாரும் ஆறு வருஷம் எம்.பி.,யா இருந்து, நோகாம நுங்கு திங்க பார்க் கிறீங்களே... கூட்டணி கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்களை வாரி வழங்கிட்டு, தி.மு.க.,வினர் எங்க போவாங்க என்ற, 'டவுட்' வருதே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us