தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 28, 2026 03:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 28, 2026 03:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: ஏழை எளிய மக்களுக்கு இலவச நலத் திட்டங்களை செயல்படுத்தினால், அனைவரும் விமர்சிக்கின்றனர். 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற தாரக மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாமல் பேசுவது சரியல்ல. இலவசங்கள் என்பது இங்கு மட்டுமல்ல; அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் காணப்படுகிறது. இது, மக்களை சோம்பேறியாக்கும் திட்டங்கள் அல்ல.

டவுட் தனபாலு: 'மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு'ன்னு ஒரு பழமொழி உண்டு... இலவசங்கள் வழங்குவதற்கு பதிலாக, வேலைவாய்ப்புக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தால், மக்களுக்கு தேவையானதை பணம் கொடுத்தே வாங்கிடுவாங்களே... அதை செய்யாம, எல்லாத்துக்கும் உங்களிடம் மக்கள் கையேந்தி நிற்கணும்னு எதிர்பார்க்கிறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!





மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை அகற்ற வேண்டும் என்பதால், தி.மு.க., கூட்டணியில் ஆறு தொகுதிகளை ஏற்றுக் கொண்டோம். ஆனால், இந்த முறை இரட்டை இலக்கத்தில், அதாவது, 10 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட வேண்டும் என்று, மா.கம்யூ., மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, தொகுதிகளை கேட்டு பெறுவோம்.

டவுட் தனபாலு: வி.சி., கட்சியினரும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்கிறாங்க... ம.தி.மு.க., - இந்திய கம்யூ., வரிசையில், நீங்களும் இரட்டை இலக்கத்தில் 'சீட்' கேட்கிறீங்க... எல்லாருக்கும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கிட்டா, ஆளுங்கட்சியான தி.மு.க., ஒற்றை இலக்கத்தில் தான் போட்டியிட வேண்டியிருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர்: தி.மு.க., கூட்டணியில், கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிபந்தனையாக உள்ளது; உள்ளாட்சி தேர்தலிலும் அதிகார பகிர்வு வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டாம் என எந்த கட்சியும் சொல்ல விரும்பாது. லாபம், நஷ்டம் பாராமல் செயல்பட, தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நாங்கள் நடத்தவில்லை.

டவுட் தனபாலு: நீங்க தொண்டு நிறுவனம் நடத்தலை என்பது உண்மை தான்... அதே நேரம், பெரிய அளவில் தொண்டர்கள் பலமில்லாத உங்க கட்சிக்கு கூடுதல் தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் குடுக்கும் அளவுக்கு, தி.மு.க., ஒன்றும் ஏமாளி கட்சி அல்ல என்பதிலும், 'டவுட்'டே இல்லை!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us