தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 21, 2026 01:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2026 01:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: நான் அரசியலுக்கு வந்ததில் இருந்தே, அந்த டீம்; இந்த டீம் என வதந்தி, அவதுாறு பரப்பினர். நான் எந்த டீமும் இல்லை. தமிழகத்தில், த.வெ.க., தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக உள்ளேன். யாருக்காகவும், எதற்காகவும், நான் சமரசம் செய்ய மாட்டேன்; யார் என்ன அவதுாறு பரப்பினாலும், அதை நம் கட்சியினர் நம்பாதீர்கள். நமது இலக்கை நம்மால் அடைய முடியும்.

டவுட் தனபாலு: 'த.வெ.க.,வை ஆட்சியில் அமர்த்துவேன்'னு முழங்குறீங்களே... பெரும் பண முதலைகளான, தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் அளவுக்கு உங்க கட்சியினரிடம் பணபலம் இருக்கா என்ற, 'டவுட்' வருதே... ஒருவேளை, உங்க படங்களுக்கு போஸ்டர் ஒட்டிய அப்பாவி ரசிகனை, உங்க சொந்த பணத்தை செலவழித்து, எம்.எல்.ஏ.,வாக்க போறீங்களோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!

lll

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்திருப்பதால், ஏற்கனவே கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு, தொகுதிகள் குறைத்து தரப்படுவதாக கூறப்படுவது தவறு. எங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை.

டவுட் தனபாலு: ஆனாலும், உங்க கட்சியை சுட்டிக்காட்டி தான், மற்ற எல்லா கட்சிகளும் கூடுதல் சீட்களை கேட்கிறாங்க... எல்லாருக்கும் சீட்களை பகிர்ந்து குடுத்துட்டு, கடைசியில் உங்களுக்கு உத்தரவாதம் கொடுத்திருந்த தொகுதிகளை குறைச்சிட்டா என்ன பண்ணுவீங்க என்ற, 'டவுட்' வருதே!

lll

ராமதாஸ் அணி பா.ம.க.,வின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி: ராமதாஸ் தலைமையில் பா.ம.க.,விற்கு அங்கீகாரம் கிடைப்பதே முக்கியம். மாம்பழ சின்னம் பிரச்னைக்கு நீதிமன்றத்தின் மூலம் நல்ல முடிவு வரும் என்று ராமதாஸ் நம்புகிறார். தமிழக தேர்தல் அரசியலில், ராமதாசை யாராலும் தனிமைப்படுத்த முடியாது. கூட்டணி குறித்து, இன்னும் ஓரிரு நாட்களில் பா.ம.க., தலைமை அறிவிக்கும்.

- டவுட் தனபாலு: வருஷம் பொறந்ததில் இருந்தே, இதே டயலாக்கை தான் சொல்லிட்டு இருக்கீங்க... ஆனா, உங்க அணியை கூட்டணியில் சேர்த்துக்க, எந்த கட்சியும் முன்வந்த மாதிரி தெரியலையே... கடைசியா, உங்க பழைய பங்காளி பண்ருட்டி ராமச்சந்திரன் துவக்கியிருக்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைக்க போறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us