தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 25, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2026 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார்: என்னுடன், 30 ஆண்டுகள் பயணித்தவர்களுக்கு, பா.ஜ.,வில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. என் ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனையில், மறுபடியும் சமத்துவ மக்கள் கட்சியை துவக்க வேண்டும் என்றனர். இதுவரை எனக்கும் பதவி வழங்கப்படவில்லை; பதவி இருந்தால் தான் செயல்பட முடியும். இதை, கட்சி தலைமையிடம் தெரிவித்து விட்டேன்.

டவுட் தனபாலு: நள்ளிரவு துாக்கத்தில் கண்ணு முழிச்சு, மனைவி ராதிகாவிடம் யோசனை கேட்டு, காலையில் சமத்துவ மக்கள் கட்சியை, பா.ஜ.,வில் இணைத்த உங்க வேகத்துக்கு, மறுநாளே முக்கிய பதவியை தந்திருக்க வேண்டாமா... 'இனியும் தாமதித்தால், மறுபடியும் நள்ளிரவில் கண்ணு முழிக்க வேண்டியிருக்கும்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநில செயலர் சண்முகம்: தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம், கூடுதல் தொகுதிகள் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தினோம். கூடுதல் கட்சிகள் கூட்டணியில் இணைந்ததால், கூடுதல் தொகுதிகள் தர முடியவில்லை என தெரிவித்தனர். ஆறு தொகுதிகள் கேட்ட எங்களுக்கு ஐந்து தொகுதிகள் கொடுத்ததில் திருப்தியில்லை. ஆனாலும், தமிழகம் முழுதும், தி.மு.க., கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவோம்.

டவுட் தனபாலு: தொழிலாளர்கள் உழைப்பை உறிஞ்சுவதாக கூறி, முதலாளித்துவத்துக்கு எதிராக, தமிழகம் முழுக்க போராட்டம் பண்றவங்க நீங்க... தமிழகத்தின், 234 தொகுதிகள்லயும் உங்க கட்சியினர் இருக்காங்க... உங்களுக்கு அஞ்சு தொகுதிகளை மட்டும் குடுத்துட்டு, 229 தொகுதிகள்லயும் உங்க கட்சியினர் உழைப்பை தி.மு.க., உறிஞ்சுதோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?

lll



நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில் தனியார் பள்ளி, கல்லுாரிகள் தரமாக இருக்கின்றன; அரசு நடத்தும் பள்ளி, கல்லுாரிகள் தரமற்றவையாக இருக்கின்றன. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால், தனியார் மருத்துவமனைக்கு போகின்றனர். ஏனென்றால், அரசு மருத்துவமனைகளில் தரமில்லை. தரமற்றவர்களின் கையில் அதிகாரம் இருப்பதே, இதற்கு காரணம்.

டவுட் தனபாலு: நீங்க சொல்றது சரிதான்... தனியார் மருத்துவமனைகளில் எந்த ஊழலும், முறைகேடும் இல்லையே... ஆனா, அரசு மருத்துவமனைகளில் மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் வாங்குறதுன்னு எல்லாத்துலயும் கமிஷன் கலாசாரம் கொடிகட்டி பறக்கிறப்ப, அங்க தரமான சிகிச்சை கிடைப்பது, 'டவுட்'தான்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us