தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 26, 2026 02:09 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2026 02:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: எங் கள் கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமோ, அதுபோல தி.மு.க., கூட்டணி நலனும் முக்கியம் என்பதால், எட்டு தொகுதிகளை ஏற்றுக் கொண்டோம். ஒன்றிரண்டு தொகுதிகளுக்காக சண்டையிட்டு, வெற்றியில் சேதத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதால் சுமுகமாக முடித்திருக்கிறோம்; இதில், எங்களுக்கு மனநிறைவுதான். ராஜ்யசபா எம்.பி., 'சீட்' தருவது குறித்து, பரிசீலிப்பதாக தி.மு.க.,வில் உறுதி அளித்துள்ளனர்.

டவுட் தனபாலு: தேர்தலுக்கு முன்னாடி, குறைஞ்சது, 25 தொகுதிகள்னு பேச ஆரம்பிச்சு, 15, 10ன்னு இறங்கி வந்து, கடைசியில எட்டு தொகுதிகளை ஏத்துக்கிட்டீங்களே... 'இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்' என்ற உங்களது லட்சியம், 2031 சட்டசபை தேர்தலிலாவது ஈடேறுமா என்பது, 'டவுட்'தான்!

: பத்திரிகை செய்தி: சென்னையில், தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள், 'வரும் சட்டசபை தேர்தலில், கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா மற்றும் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் இருவரும் கண்டிப்பாக போட்டியிட வேண்டும்' என, வலியுறுத்தினர். இதை ஏற்று, இருவரும் போட்டியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

டவுட் தனபாலு: தி.மு.க., தந்திருக்கும், 10 சீட்களில், தாயும், மகனுமே ரெண்டு சீட்களை எடுத்துக்கிட்டால், கட்சியினருக்கு வெறும் எட்டு சீட்கள் தானா... அதையும், விஜயகாந்த் மீதான பற்றால, சொத்துக்களை எல்லாம் விற்று, கட்சிக்கு செலவழித்தவங்களுக்கு தருவாங்களா அல்லது பணம் படைத்தவங்களுக்கு தான் சீட்னு சொல்லிடுவாங்களா என்ற, 'டவுட்'தான் வருது!

: பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: ஒரு திட்டத்துக்கான அடுத்த கட்ட நிதியை, மத்திய அரசு விடுவிக்க வேண்டுமென்றால், ஏற்கனவே பெற்ற நிதியை எவ்வாறு பயன்படுத்தினோம் என்பது குறித்த பயன்பாட்டு சான்றிதழை மாநில அரசு சமர்ப் பிக்க வேண்டும். தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் ஒரு பகுதியாக , கேரளாவுக்கு, 311.95 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது; ஆனால், இந்த தொகையை கேரள அரசு பயன்படுத்தவே இல்லை.

டவுட் தனபாலு: கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடக்குது... அங்க, உங்க கட்சி வேகமா வளர்ந்துட்டு வருது... அந்த கடுப்புல தான், ஒதுக்கிய நிதியை செலவழிக்காம, 'நிதியே தரலை' என்று, மத்திய பா.ஜ., அரசு மீது கேரள அரசு பழிபோட பார்க்குதோ என்ற, 'டவுட்'தான் வருது!

:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us