தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 30, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 30, 2026 03:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க., தலைவர் விஜய்: என் அம்மா, அக்கா, தங்கைகளை தரக்குறைவான வார்த்தையால், தி.மு.க.,வின் ஆதரவாளராக செயல்படும் கைக்கூலி ஒருவர், வாய்க்கு வந்த படி விமர்சித்திருக்கிறார். தி.மு.க., தலைமையின் அரவணைப்பில் செயல்படும் ஆதாய சூதாடிகளையும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத, தி.மு.க., அரசையும் கண்டிக்கிறேன்.

டவுட் தனபாலு: மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ் பேசியது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதில், 'டவுட்' இல்லை... ஆனாலும், சமூக வலைதளங்களில் உங்களது ரசிகைகள், எல்லை மீறி பேசுவதை எல்லாம் நீங்க கண்டிக்காமலும், கண்டுக்காமலும் இருப்பது ஏன் என்ற, 'டவுட்'டையும் கிளப்புதே!

பத்திரிகை செய்தி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி, தமிழக சட்டசபை தேர்தலில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அணியுடன் கூட்டணி அமைத்து உள்ளார். புதுச்சேரியில், அம்மாநில கட்சியான, செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்துடனும் சசிகலா கூட்டணி அமைத்துள்ளார். அந்த கட்சி, நான்கு தொகுதிகளில் அங்கு போட்டியிடுகிறது.

டவுட் தனபாலு: சசிகலா கட்சியில் தான், 'அனைத்திந்திய' என்ற பெயரை சேர்த்திருக்காங்களே... கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்கள்லயும் சட்டசபை தேர்தல்கள் நடக்குதே... அந்தந்த மாநிலங்கள்ல இருக்கிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை சசிகலா ஏன் தவிர்த்துட்டாங்க என்ற, 'டவுட்' வருதே!

அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிக்கை: தமிழக பெண்களை கீழ்த்தரமாக விமர்சித்ததோடு, 'மன்னிப்பும் கேட்க மாட்டேன்' என, தி.மு.க., ஆதரவாளர் பொன்ராஜ் பேசியுள்ளார். தி.மு.க.,வினரின் கேவலமான பேச்சு மற்றும் பார்வையை, மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளார், இவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளர் என, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பொன்ராஜின் பேச்சுகள், கண்ணியத்தின் உறைவிடமான, கலாமின் புகழுக்கே இழுக்கை ஏற்படுத்துகிறது.

டவுட் தனபாலு: 'நடிகர் விஜய்க்கு பொண்டாட்டியாக கூட இருப்போம்' என்று சொன்ன பெண்களை தான் பொன்ராஜ் விமர்சனம் செஞ்சிருந்தார்... அவர், ஒட்டுமொத்த தமிழக பெண்களையும் விமர்சனம் பண்ணிட்டதா ஏன் திசை திருப்புறீங்க... பிரபல நடிகை எனக்கு வேணும்னு பேசிய, உங்க கட்சியின் முன்னாள் அமைச்சர் சண்முகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காம, மற்றவங்களை விமர்சிப்பது சரியா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us