sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

5


PUBLISHED ON : ஏப் 06, 2026 03:16 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 06, 2026 03:16 AM

5


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: சமையல் காஸ் பிரச்னை தீராததால், பலருக்கு கஷ்டமும், நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. மத்திய, பா.ஜ., அரசு உஷாராக இருந்திருந்தால், எரிபொருள் பற்றாக்குறையை குறைத்திருக்கலாம். தமிழகத்தில், தி.மு.க., அரசு முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால், நம் மாநிலத்தில் மட்டுமாவது பற்றாக்குறையை குறைத்திருக்கலாம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் சாரை கேட்டால், 'நமக்கும், அதற்கும் சம்பந்தமில்லை' என்கிறார்.

டவுட் தனபாலு: மேற்காசிய போரால், உலகம் முழுக்க பல நாடுகள்லயும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுது... ஏதோ, இந்தியாவிலும், தமிழகத்திலும் மட்டும் தான் பற்றாக்குறை என்பது போல பேசுறீங்களே... 'விஜய்க்கு அரசியல் தெளிவு இல்லை'ன்னு உங்களை எதிர்க்கும் சில கட்சியினர் சொல்றதை, உண்மையாக்க பார்க்கிறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll



பத்திரிகை செய்தி: தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., -- அ.தி.மு.க., கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று அணிகளுக்கு போட்டியாக, நடிகர் விஜய் தலைமையிலான, த.வெ.க., களமிறங்கியுள்ளது. தேர்தலுக்கு புதியவர்களான, த.வெ.க.,வினர் தேர்தல் செலவுக்கு பணமின்றி மிகுந்த சிரமப்படுகின்றனர். 'தேர்தல் முடியும் வரை செலவுகளை எப்படி சமாளிப்பது' என, புரியாமல் தவித்து வருகின்றனர்.

டவுட் தனபாலு: 'மக்களுக்காக, பல நுாறு கோடி ரூபாய்களை வழங்கும் சினிமாவை விட்டுட்டு வந்திருக்கேன்'ன்னு, அந்த கட்சியின் தலைவர் விஜய் உருக்கமா பேசுறாரே... அவர் சம்பாதித்து வைத்திருக்கும் கோடிகளை எடுத்து, வேட்பாளர்களின் செலவுக்கு தரலாமே... முதல்வர் பதவியில் அமர நினைக்கிறவர், தன் கட்சி வேட்பாளர்கள் ஜெயித்தால் தான், அந்த கனவு நனவாகும் என்பதை யோசிக்க மறந்துட்டாரோ என்ற, 'டவுட்' வருதே!

முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் கார்த்திக், என் நண்பர். நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள். அவரை வெற்றி பெறச் செய்தால், உங்கள் தொகுதிக்கு என்னென்ன தேவையோ, அனைத்தையும் அவர் செய்து கொடுப்பார். அதற்கு நான் உத்தரவாதம்.



டவுட் தனபாலு: முதல்வர் குடும்பத்தில் ஏற்கனவே கனிமொழி, உதயநிதி அரசியல்ல இருக்காங்க... இந்த தேர்தல்ல, உங்க நண்பரை வேட்பாளராக்கிட்டீங்க... அடுத்த தேர்தல்ல நீங்களும் போட்டியிட வசதியா, நண்பரை முதலில் களமிறக்கி, ஆழம் பார்க்கிறீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us