sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : ஏப் 09, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2026 04:07 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'துரைமுருகனுக்கு வயதாகி விட்டது; அவரால் நடக் கவே முடியவில்லை. அதிக முறை வென்றவர் என்ற பெருமைக் காக போட்டியிடுகிறார்; ஒவ்வொரு முறையும் இதுதான் என் கடைசி தேர்தல் என்கிறார்' என, என்னை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். பழனிசாமி, வழக்கமாக பேசும் பொய்களில் இதுவும் ஒன்று.



டவுட் தனபாலு: 'உதயநிதி முதல்வராகிறப்பவும் நான் அமைச்சராக இருப்பேன்'னு ஏற்கனவே நீங்க சொல்லியிருக்கீங்க... அந்த வகையில், 'இது எனக்கு கடைசி தேர்தல் இல்லை... அடுத்தடுத்த தேர்தல்களிலும் போட்டியிடுவேன்... இளைஞர்களுக்கு வழிவிடவே மாட்டேன்'னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



தமிழக முதல்வர் ஸ்டாலின்: புதுச்சேரியை நாசமாக்கியுள்ள காவிப் படையை விரட்டியடிக்க வேண்டும். பா.ஜ., கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் நிலைதான் வரும். தனக்கு தெரிந்த ரூட்டில் ரங்கசாமியை எப்போது, எப்படி கவிழ்க்கலாம் என, பா.ஜ., சிந்திக்கிறது. இது ரங்கசாமிக்கும் தெரியும்; அவரும் சாமானியப்பட்டவர் இல்லை.

டவுட் தனபாலு: பீஹாரில், தே.ஜ., கூட்டணி ஜெயித்து ஆட்சிக்கு வந்த பிறகு தான், நிதிஷ்குமாரிடம் இருந்து, முதல்வர் பதவியை பெறும் முடிவை பா.ஜ., எடுத்தது... அந்த வகையில், 'புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணி தேறாது; தே.ஜ., கூட்டணியே மீண்டும் ஜெயித்து, ரங்கசாமிதான் முதல்வர் ஆவார்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!



லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: புதுச்சேரியில் கவர்னரை வைத்து, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம், பா.ஜ.,வே ஆளுகிறது. பா.ஜ.,வினர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை; நாங்கள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை கொடுப்போம். புதுச்சேரியை மக்கள் ஆள வேண்டும்; கவர்னர் அல்ல. எனவே, மாநில அந்தஸ்தை பெற்று தர, காங்., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: தேசிய அளவிலும், புதுச்சேரியிலும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக உங்க கட்சிதான் ஆட்சியில் இருந்துச்சு... அப்ப எல்லாம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காம, துாக்கத்துல இருந்துட்டு, இப்ப தேர்தலுக்காக, 'மாநில அந்தஸ்து' என்ற உங்க வாக்குறுதியை, புதுச்சேரி மக்கள் நம்புவாங்களா என்பது, 'டவுட்'தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us