sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஏப் 11, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2026 12:00 AM

2


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: புதுச்சேரியில், காங்., - எம்.பி., ராகுல் பிரசாரம் செய்தபோது, தி.மு.க., என்றோ, ஸ்டாலின் என்றோ உச்சரிக்கவே இல்லை. அதே நாளில் தான் முதல்வர் ஸ்டாலினும் அங்கு பிரசாரம் செய்தார். அவரும், ராகுல் பெயரை சொல்லவே இல்லை. 'இண்டி' கூட்டணி பிளவுபட்டுள்ளது. தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவதை, ராகுல் விரும்புவாரா என தெரியவில்லை.

டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... என்னதான், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றாலும், 'ஆட்சியில் பங்கு தர மாட்டோம்'னு ஏற்கனவே தெளிவாக சொல்லிட்டாங்க... காங்கிரசில் சில எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் ஜெயித்து, சட்டசபைக்கு போய் தி.மு.க.,வுக்கு புகழ் பாடிட்டு இருக்கணுமான்னு ராகுல் யோசிக்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!



மதுரை, மேலுார் தொகுதியில், காங்.,கில் சீட் கிடைக்காத விரக்தியில், மதச்சார்பற்ற சோசலிஷ காங்கிரஸ் என்ற கட்சியை துவங்கியுள்ள சீனிவாசன்: காங்., வேட்பாளராக வேண்டும் என்றால், 10 கோடி ரூபாய் உள்ளதா என கேட்கின்றனர்; என்னிடமும் கேட்டனர். 10 கோடி ரூபாய் இருக்கு என தெரிவித்தேன். மேலுாருக்கு என் பெயர் தான் பட்டியலில் இருந்தது. கடைசி நேரத்தில், விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் அரசியல் செய்து தடுத்து விட்டார். மேலுார் தொகுதியில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

டவுட் தனபாலு: காங்., கட்சியிலயே, சீட்டுக்கு, 10 கோடி ரூபாய் கேட்டிருக்காங்க என்றால், ஆளும் கட்சியான தி.மு.க., வேட்பாளர்களிடம் எவ்வளவு கேட்டிருப்பாங்க என்ற, 'டவுட்' வருதே... அரசியல் என்பது மக்கள் சேவையில் இருந்து, முதலீடு போட்டு லாபம் எடுக்கும் தொழிலா மாறிடுச்சு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: மதுரையில் பிரசாரம் செய்த, பா.ஜ.,வை சேர்ந்த, மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், 'மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என்றால், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும்' என்கிறார். தேர்தல் களத்தில் கூட உருட்டல், மிரட்டல், 'பிளாக்மெயில்' அணுகுமுறையை பா.ஜ.,வினர் கையாள்கின்றனர்.

டவுட் தனபாலு: உங்க கூட்டணியில் கூட, 'தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 8,000 ரூபாய் பரிசு கூப்பன், மகளிர் உரிமைத் தொகை, 2,000 ரூபாயாக உயர்வு'ன்னு பல கவர்ச்சி வாக்குறுதிகளை தந்திருக்காங்களே... நீங்க சொன்னால் வாக்குறுதி, எதிர்க்கட்சியினர் சொன்னால், 'பிளாக்மெயில்'னு திசை திருப்புவதா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us