தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஏப் 13, 2026 12:30 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2026 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்: அ.தி.மு.க.,வில் நான் இருந்த போது, முதல்வர் பதவியையும், பொதுச்செயலர் பதவியையும் விட்டு கொடுத்தது, பழனிசாமிக்கு துரோகமாக தெரிகிறதா... கட்சியின் தலைவராக இருந்த ஜெயலலிதா மறைந்ததும், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்த போது, இரண்டு பெயர்கள் தான் கட்சியினர் முன் நின்றன. ஒன்று நான், மற்றொன்று பழனிசாமி. அப்போது, 'எனக்கு, முதல்வர் பதவியை விட, கட்சி உடைந்து விடக் கூடாது என்பதே முக்கியம்' என கூறி, அனைவரும் இணைந்து, பணியாற்ற வழி வகை செய்தேன்.

டவுட் தனபாலு: பழனிசாமி, கிடைச்ச கயிற்றை பிடிச்சு, மளமளன்னு மேல ஏறி, கட்சியை அவர் கைக்குள்ள கொண்டு வந்துட்டாரு... அரசியல்ல கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்காம இருந்தா என்ன நடக்கும் என்பதற்கு, சரியான உதாரணம் நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தமிழக, பா.ஜ., செயலர் வினோஜ் செல்வம்: தி.மு.க.,வை பொறுத்த வரை, தமிழகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலான தேர்தல், இது கிடையாது. இந்த சட்டசபை தேர்தல், முதல்வர் நாற்காலியை எவ்வித பிரச்னையும் இல்லாமல், உதயநிதிக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கான தேர்தல். இந்த தேர்தலுக்கு, 2,000 கோடி ரூபாயை, தி.மு.க., செலவு செய்கிறது. உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, இத்தனை கோடி ரூபாயை, தி.மு.க., செலவு செய்கிறது.

டவுட் தனபாலு: தி.மு.க.,வில், தேர்தலுக்காக, 2,000 கோடி ரூபாயை செலவழிக்கிறாங்களோ, இல்லையா என்பது தெரியாது... ஆனா, அஞ்சு வருஷம் ஆளுங்கட்சியாக இருந்து, 'சம்பாதித்த' பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, இந்த தேர்தலை சந்திக்கிறாங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!

தமிழக, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: எங்கள் கூட்டணியை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்; விஜய் முடிவு செய்ய முடியாது. யாரோ நான்கு பேர் சேர்ந்ததால், காங்கிரஸ் கட்சி தன்னுடன் இருப்பதாக, அநாகரிகமாக விஜய் இனி பேசக் கூடாது. நடிகர் அஜித் சாலையில் சென்றால் கூட, ஏராளமானோர் அவர் பின்னால் செல்வர். அஜித், ரஜினி ஆகிய இருவருக்கும் தான், துடிப்பான ரசிகர்கள் இருக்கின்றனர்.

டவுட் தனபாலு: விஜய் ஒண்ணும் சும்மா சொல்லியிருக்க மாட்டார்... விஜய் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் கொண்ட காங்கிரசார் நிறைய பேர் இருக்காங்க... அவங்க எல்லாம், கூட்டணி தர்மத்தை மதித்து, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போடு வாங்களா என்பது, 'டவுட்' தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us