sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 20, 2026 ,சித்திரை 7, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : ஏப் 19, 2026 01:02 AM

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2026 01:02 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.மா.கா., தலைவர் வாசன்: தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு வந்தால், 'காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் வழங்குவேன் என கூறினீர்களே... அது எங்கே?' என்று கேளுங்கள். 'நெல், கரும்பு உள்ளிட்டவற்றுக்கு ஆதார விலை தருவதாக வாக்குறுதி அளித்தீர்களே... அது என்னவாயிற்று; ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் என்னவானது?' என்று தைரியமாக கேளுங்கள்!

டவுட் தனபாலு: உங்க யோசனையை கேட்டு வாக்காளர்கள் கேள்வி கேட்டாலும், 'எங்க பிரசாரத்தில், எதிர்க்கட்சியினர் புகுந்து ரகளை பண்றாங்க'ன்னு சொல்லி, தி.மு.க.,வினர் அடிதடியில இறங்கி, ரணகளமாகிடும்... அப்புறமா, வன்முறையை துாண்டி விட்டதா உங்க மீது தான் வழக்கு பாயும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

பா.ம.க., தலைவர் அன்புமணி: ஜி.கே.மணி, பல ஆண்டுகளுக்கு முன், என் தந்தை ராமதாசிடம் வந்தபோது, ஒரு கிழிந்த வேட்டியை கட்டிக் கொண்டு வந்தார். 'எனக்கு சொந்தமாக கார் கூட இல்லை' என, உருக்கமாக பேசினார். இப்படி எல்லாம் பேசி பேசி இன்று, 2,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகி விட்டார்.

டவுட் தனபாலு: ஜி.கே.மணி, அமைச்சர் பதவி எல்லாம் வகிக்கவில்லை... வெறும் எம்.எல்.ஏ.,வாக மட்டும் தான் இருந்தார்... உங்க கட்சியில் இருந்தே, 2,000 கோடி ரூபாய் சம்பாதிச்சிட்டார்னு சொல்றீங்களே... அப்படி என்றால், அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற, நாட்டை ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிச்சிருப்பாங்க என்ற, 'டவுட்' வருதே!

lll

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அரசு அதிகாரிகள், இனியும் தி.மு.க., ஆட்சி தொடரும் என்ற நினைப்பில் இருக்கக் கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். கரூரில், அ.தி.மு.க.,வினர் மீது நிறைய பொய் வழக்குகள் போடுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், போட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் தோண்டி எடுத்து, கடும் நடவடிக்கை எடுப்பேன். தவறாக நடந்த அதிகாரிகள் யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். முன்பிருந்த பழனிசாமி வேறு; இப்போது இருக்கும் பழனிசாமி வேறு.

டவுட் தனபாலு: சரியா போச்சு... தி.மு.க., மீது அதிருப்தியில் இருக்கும் அரசு அதிகாரிகள் சிலர், தேர்தலில் உங்க தரப்புக்கு சாதகமா செயல்படலாம் என்ற யோசனையில் இருந்தாலும் இருந்திருப்பாங்க... இப்ப, உங்க எச்சரிக்கையை பார்த்துட்டு, அந்த முடிவை மாத்திக்குவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll






      Dinamalar
      Follow us