sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 29, 2026 ,சித்திரை 16, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஏப் 28, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 28, 2026 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: தேர்தலில், அ.தி.மு.க., வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வருகின்றன. ஆட்சி முடியும் நேரத்தில் கூட, விரக்தியின் விளிம்பில் உள்ள தி.மு.க.,வினர் செய்யும் அடாத செயல்கள், வன்மையாக கண்டிக்கத்தக்கவை. எனவே, தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க., நிர்வாகிகள் மீது, போலீசார் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க... அதே நேரம், ஓட்டு எண்ணிக்கை முடிவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நீங்க முதல்வராகிட்டா, தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினரை எல்லாம் நம்ம போலீசார் மொத்தமா துாக்கி, 'உள்ள' தள்ளி, உங்களிடம் நல்ல பெயர் எடுத்துடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும், அ.தி.மு.க., - தி.மு.க., நேரடியாக போட்டியிட்டன. தி.மு.க., தரப்பில், ஓட்டுக்கு 6,000 ரூபாய், அ.தி.மு.க., தரப்பில் 3,000 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க., சார்பில் அரை கிராம் தங்கக் காசு, அ.தி.மு.க., சார்பில் 4 கிராம் வெள்ளி காசுகள் வழங்கப்பட்டன. தி.மு.க.,வினர் வழங்கியது, 9 காரட் கொண்ட 200 மில்லி கிராம் தங்கக்காசு என தெரிந்தது. இதனால், அந்த காசுகளை, நகைக் கடையிலேயே, 2,000 ரூபாய்க்கு பலரும் விற்று விட்டனர்.

டவுட் தனபாலு: அவங்க கொடுத்தாங்கன்னு, மக்கள் வாங்கிக்கிட்டாங்க... ஆனா, 'இவ்வளவு எப்படி செய்ய முடியும்?'னு மக்கள் யோசிக்காம விட்டுட்டாங்களே... நல்லவேளையா, 9 காரட்டுக்கு குறைஞ்ச தங்கம் இல்லை... இருந்தா, அதைத்தான் தி.மு.க.,வினர் குடுத்திருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தேர்தலுக்கு பின், தமிழக அரசியல் களம் மாறும் என சொல்லி இருந்தேன். தேர்தலில் விஜயும், அவருடைய கட்சி வேட்பாளர்களும் பெறும் ஓட்டுகளை வைத்து, தமிழக அரசியல் களம் மாறும் என்ற பொருளில் தான் அப்படி சொல்லி இருந்தேன்.

டவுட் தனபாலு: ஓட்டு எண்ணிக்கையில், 100 இடங்களுக்கு மேல விஜய் கட்சி ஜெயிச்சுட்டா, உங்களை போன்ற சின்ன கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் தான், அடுத்த முதல்வர் யார்னு தீர்மானிப்பீங்க... 'விஜய்க்கு நாங்க ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு கூட அரசியல் களம் மாறும்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!






      Dinamalar
      Follow us