sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.சி., கட்சி எம்.பி., ரவிகுமார்: மத்திய அரசு வெளியிட்ட, 2023ம் ஆண்டின் சிறைகள் குறித்த அறிக்கையின்படி, நாடு முழுதும் குண்டர் தடுப்பு சட்ட கைதுகளில், தமிழகம் முன்னிலையில் உள்ளது. நாடு முழுதும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,916. இதில், தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்கள், 1,354 பேர். வரும் காலங்களில், இச்சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை, முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு: தமிழகத்தில், 2023ல் தி.மு.க., ஆட்சிதான் நடந்துச்சு... நீங்களும், அந்த கூட்டணியில் தானே இருந்தீங்க... அப்பவே, முதல்வரா இருந்த ஸ்டாலினிடம் இதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுங்கன்னு கேட்காம இருந்தது ஏன் என்ற 'டவுட்' வருதே!

lll

காங்., கட்சியை சேர்ந்த தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார்: காமராஜரின் ஆட்சி அமைய வேண்டும் என காத்திருந்த காங்., தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி உள்ளது. தொண்டர்கள் தான், இந்த அமைச்சர் பதவியை தந்துள்ளனர். மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நாங்கள் பணியாற்றுவோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும். மக்கள் பணிகளோடு, காங்.,கை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்.

டவுட் தனபாலு: நல்லது... 59 வருஷங்களுக்கு பிறகு, தமிழக அமைச்சரவையில் இடம் பிடிச்சிருக்கீங்க... இப்போதைக்கு கூட்டணி அரசில் இருக்கும் நீங்க, உங்க கட்சி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமா இருந்தா, 'தமிழகத்தில் காமராஜர் ஆட்சி' என்ற உங்க கனவு ஒருநாள் நனவாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ்: தி.மு.க.,வுக்கு, 50 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்தேன். 2021ல் திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக தேர்வானேன். இந்த தேர்தலில், மாற்று கட்சியில் இருந்து வந்த மேயர் தினேஷ்குமாரை ராஜினாமா செய்ய வைத்து, தெற்கு தொகுதியில், 'சீட்' வழங்கினர். நான் விருப்ப மனுவே அளிக்காத பல்லடம் தொகுதி எனக்கு வழங்கப்பட்டது. மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, என்னை போன்ற விசுவாசிக்கு தலைமை கொடுக்கவில்லை. இதனால், திருப்பூர் மத்திய மாவட்ட செயலர், கட்சி உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

டவுட் தனபாலு: உங்களுக்கு போட்டியா சீட் வாங்கிய தினேஷ்குமார், மேயர் பதவியையும் இழந்து, தெற்கு தொகுதியில் தோத்தும் போயிட்டாரே... ஒருவேளை பல்லடத்தில் நீங்க ஜெயித்திருந்தால், இந்த ராஜினாமா முடிவை எடுத்திருக்க மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us