sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : மே 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2026 12:00 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக காங்., மூத்த தலைவர் தங்கபாலு: என் அரசியல் பயணம், 50 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கிறது. என் உழைப்புக்கு அங்கீகாரமாக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் துவங்கி மாநில தலைவர், லோக்சபா எம்.பி., ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் என, பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறேன். சட்டசபை தேர்தலில் கூட எனக்கோ, என் மகனுக்கோ, 'சீட்' கேட்கவில்லை. ராஜ்யசபா எம்.பி., 'சீட்' கேட்டு, டில்லியில் யாரையும் சந்தித்து பேசவும் இல்லை.

டவுட் தனபாலு: ஏற்கனவே, தேர்தலுக்கு முன்னாடி தி.மு.க.,விடம் உங்க கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிட்டு, தேர்தல் முடிஞ்சதும் தமிழக வெற்றிக் கழக அணிக்கு தாவிட்டீங்க... தமிழகத்தில் இப்ப காலியா இருக்கும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டையும், உங்க கட்சிக்கு த.வெ.க., ஒதுக்காது என்பதை நல்லா தெரிஞ்சுக்கிட்டு தான், இப்படி சொல்றீங்கன்னு, 'டவுட்' இல்லாம தெரியுது!

lll

பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியான, மக்கள் விரும்பிய மாற்றத்தை தமிழக வெற்றிக் கழக அரசு தரவில்லை. எனவே, முந்தைய தி.மு.க., ஆட்சியின் நீட்சியாகத்தான் இந்த அரசை பார்க்க முடியும். எம்.எல்.ஏ.,க்களை விலை பேசி த.வெ.க., நடத்தியது குதிரை பேர அரசியல் அல்ல; கழுதை பேர அரசியல்.

டவுட் தனபாலு: எம்.எல்.ஏ.,க்களை மொத்தமா கட்சி மாற வைக்கும் கலாசாரத்தை நாடு முழுக்க அறிமுகப்படுத்தியதே, உங்க கட்சி தானே... உங்க வழியை பின்பற்றும் த.வெ.க.,வினரை பாராட்டாம, விமர்சனம் பண்றது சரியா என்ற, 'டவுட்' தான் வருது!

lll

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: இந்த தேர்தலில், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஓட்டுகள் 100 சதவீதம் முழுமையாக தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கவில்லை. ஆனால், வி.சி.க.,வுக்கான தலித் ஓட்டுகள் சிதறியதால் தான், தி.மு.க., தோல்வியடைந்ததாக சொல்கின்றனர். இந்த தேர்தலில் எல்லா கட்சிகளும் ஓட்டுகளை இழந்துள்ளன. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று, அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் இடத்தை வி.சி.க., எட்டியதை பொறுக்க முடியாமல், அவதுாறு பரப்புகின்றனர்.

டவுட் தனபாலு: ஆட்சி அதிகாரத்தில் பங்குன்னு நீங்களும் 25 வருஷங்களா முழங்கிட்டு இருந்தீங்க... ஆனா, உங்களை கூட்டணியில் சேர்த்து, தலித் ஓட்டுகளை அறுவடை செய்த அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், அதிகாரத்தில் உங்களுக்கு பங்கு தரலை... இப்ப, த.வெ.க., மூலமா உங்களுக்கு அதிகாரம் கிடைச்சிருப்பதை தி.மு.க.,வினரால தாங்க முடியலை என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us